கோவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.. மொத்தம் 31.85 லட்சம் வாக்காளர்கள்
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டார். மாவட்டத்தில் மொத்தம் 31 லட்சத்து 85 ஆயிரத்து 594 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 15,58,678 ஆண் வாக்காளர்கள், 16,26,259 பெண் வாக்காளர்கள் மற்றும் 657 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் வாக்காளர் சுருக்கமுறை திருத்தம் செய்யும் பணிகள் அக்டோபர் முதல் நவம்பர் வரை நடைபெற்றது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயர் நீக்க, முகவரி மாற்றம், திருத்தம் செய்யும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலானது மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டது.

மாவட்டத்தில் மொத்தம் 31 லட்சத்து 85 ஆயிரத்து 594 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 15,58,678 ஆண் வாக்காளர்கள், 16,26,259 பெண் வாக்காளர்கள் மற்றும் 657 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் மேட்டுப்பாளையத்தில் 1,49,826 ஆண் வாக்காளர்கள், 1,62,018 பெண் வாக்காளர்கள், 47 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,11,891 வாக்காளர்கள் உள்ளனர்.
சூலூரில் 1,62,086 ஆண் வாக்காளர்கள், 1,72,126 பெண் வாக்காளர்கள், 99 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 3,34,311 வாக்காளர்கள் உள்ளனர். கவுண்டம்பாளையத்தில் ஆண் வாக்காளர்கள் 2,43,839, பெண் வாக்காளர்கள் 2,47,143, மூன்றாம் பாலினத்தவர் 151 என மொத்தம் 4,91,143 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை வடக்கு மாவட்டத்தில் 1,73,043 ஆண் வாக்காளர்கள், 1,72,855 பெண் வாக்காளர்கள், 36 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 3,45,934 வாக்காளர்கள் உள்ளனர்.
தொண்டாமுத்தூரில் 1,68,227 ஆண் வாக்காளர்கள், 1,74,557 பெண் வாக்காளர்கள், 144 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 3,42,928 வாக்காளர்கள் உள்ளனர். கோவை தெற்கு மாவட்டத்தில் 1,21,431 ஆண் வாக்காளர்களும், 1,23,398 பெண் வாக்காளர்களும், 34 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,44,863 வாக்காளர்கள் உள்ளனர்;
சிங்காநல்லூரில் 1,66,199 ஆண் வாக்காளர்கள், 1,70,611 பெண் வாக்காளர்கள், 32 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 3,36,842 வாக்காளர்கள் உள்ளனர். கிணத்துக்கடவில் 1,70,808 ஆண் வாக்காளர்களும், 17,89,63 பெண் வாக்காளர்களும், 44 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 3,49,815 வாக்காளர்கள் உள்ளனர்.
பொள்ளாச்சியில் 1,08,969 ஆண் வாக்காளர்களும், 1,20,073 பெண் வாக்காளர்களும், 44 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,29,086 வாக்காளர்கள் உள்ளனர். வால்பாறை தொகுதியில் 94,250 ஆண் வாக்காளர்கள், 1,04,505 பெண் வாக்காளர்கள், 26 மூன்றாம் வாக்காளர்கள் என மொத்தம் 1,98,781 வாக்காளர்கள் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா, தங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என இந்த அலுவலகங்களில் உறுதி செய்து கொள்ளலாம்.
மேலும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் மற்றும் திருத்தத்திற்கான தொடர் திருத்தப்பணிகள் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்படும். www.voters.eci.gov.in எனும் இணைய முகவரியின் மூலமாகவோ அல்லது Voters Helpline App மூலமாகவோ பொதுமக்கள் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications