கோவையில் ஆச்சரியம்.. டக்குனு பஸ்ஸூல ஏறி.. ஷர்மிளா கிட்டநெருங்கி போன வானதி.. கடைசியில பாத்தால்.. வாவ்
கோவை: கோவைக்கு பெருமையை தேடி தந்துள்ளார் டிரைவர் ஷர்மிளா.. யார் இவர்? எந்த பக்கம் திரும்பினாலும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டேயிருக்கின்றன.
துறுதுறுவென முகம், காக்கி உடையில் கெத்தாக காணப்படும் ஷர்மிளா, தனியார் பஸ் டிரைவராக கோவையை கலக்கி கொண்டிருக்கிறார்..

கோவை காந்திபுரம் - சோமனூர் தடத்தில் பஸ்ஸை இயக்கி வருகிறார்.. கோவை மாநகரின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
டிரைவர்: கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா.. 24 வயதாகிறது.. பார்மஸியில் டிப்ளமோ முடித்திருக்கிறார்... இவரது அப்பா ஒரு ஆட்டோ டிரைவர்.. அவரை பார்த்துதான், தானும் டிரைவராக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.. இதற்காகவே, சில காலம் ஆட்டோ டிரைவராகவும், கால் டாக்ஸி டிரைவராகவும் வேலைபார்த்திருக்கிறார் ஷர்மிளா.
முக்கியமாக, கொரோனா நேரத்தில், எத்தனையோ பேரை தன்னுடைய ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை காப்பாற்றியிருக்கிறார்.. கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் கிடைத்தபிறகு, கோவையின் விவி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் பஸ் நிறுவனத்தில் வேலைக்கு அப்ளிகேஷன் போடவும், இவரை தேடி வந்துவிட்டது டிரைவர் வேலை...
சபாஷ் பெண்: 23 வயதான டிரைவர், பயணிகள் பஸ்ஸை அசால்ட்டா ஓட்டிவருவதை பார்த்து கோவை மக்கள் வியந்து போயுள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஷர்மிளா இயக்கும் அந்த பஸ்ஸில் ஏறியுள்ளார் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன்.. இந்த பஸ்ஸில் வானதி பயணம் மேற்கொண்டார்.
ஆச்சரியம்: பஸ்ஸில் ஏறியதுமே, டிரைவர் ஷர்மிளாவுக்கு வாழ்த்துக்களை சொன்னார்.. கொஞ்ச நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார் வானதி.. இதற்கு பிறகு, வானதி சீனிவாசன் ஒரு பேட்டியும் தந்தார்.. அதில், "கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்ற செய்தி வந்ததிலிருந்தே அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்தேன்.
வாழ்த்துக்கள்: இன்னைக்குதான் நேரம் கிடைத்தது.. அதனால்தான், அதே பஸ்ஸில் ஏறி, அவருடனேயே பயணித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன்.. பஸ்ஸில் பயணம் செய்து நீண்ட காலம் ஆன நிலையில் இப்போது மறுபடியும் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.. ஒரு பெண், பேருந்து டிரைவராக இருக்கும் பேருந்தில் பயணிப்பது மகளிர் அணி தலைவியாக பெருமிதமாக கொள்கிறேன்.. பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்பதை கூற வேண்டும் என்பதுதான் தன்னுடைய நோக்கமாக உள்ளது என்றார்.
ஷர்மிளா பூரிப்பு: திடுதிப்பென்று, பஸ்ஸில் வானதி ஏறிவிடவும், ஷர்மிளா திக்குமுக்காடி போனார்.. அதுவும் தனக்கு அருகில் நின்றுகொண்டு பேசியதை நினைத்து பூரித்துப்போனார். வானதி சீனிவாசன் தன்னுடன் பஸ்ஸில் வந்திருந்தது மிகுந்த ஆச்சரியம் அளித்ததாகவும், சிறிது நேரம் தன்னுடன் பேசியதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாகவும் துள்ளி குதித்து சொல்கிறார் ஷர்மிளா.. ஆல் தி பெஸ்ட் ஷர்மிளா..!!












Click it and Unblock the Notifications