தமிழ்நாட்டின் முதல் "லுலு" மார்க்கெட்.. கலக்கும் கோயம்புத்தூர்.. 50% தள்ளுபடி?.. விட்றாதீங்க பெண்களே
கோவை: தமிழ்நாட்டின் முதல் "லுலு ஹைப்பர்" மார்க்கெட் என்ற பெயரை பெற்ற நிலையில், சிறப்பு தள்ளுபடி ஒன்றை அறிவித்து, பெண்களை ஈர்த்திருக்கிறது கோவையின் லுலு மால். என்ன அது?
கோவை அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் வளாகத்தில், இதற்கான பணிகள் துரிதமாகவே நடந்து முடிந்து, லுலு ஹைப்பர் மார்க்கெட் 1.20 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ளது.

அறிவிப்புகள்: கோவையை பொறுத்தவரை, தொழில் நகரம் என்பதால், ஏகப்பட்ட டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மால்கள் என ஷாப்பிங் இடங்கள் நிறைந்திருக்கின்றன.. ஆனாலும், எல்லா பொருட்களையும் ஒரே இடத்தில் அடக்குவதாக இந்த ஹைப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. குறிப்பாக, வீட்டு உபயோக பொருட்கள், உணவுகள், காய்கறிகள், என்று அனைத்துமே இதற்குள் அடங்கிவிட்டன..
லுலு மால் ஆரம்பித்த நாள் முதல் இப்போதுவரை அதன் விற்பனையில் எந்தவிதமான சுணக்கமும் இல்லை.. இந்த லுலு வந்ததினால், நகரத்திலுள்ள மற்ற ஷாப்பிங் மார்க்கெட்டுகள், மால்களில் கூட்டம் குறைந்து காணப்பட்டு வருகிறதாம். அதுவும் தற்போது பண்டிகை காலம் என்பதால், ஹைப்பர் மாலுக்குள் எந்நேரமும் கூட்ட நெரிசல் காணப்படுகிறதாம்.
துவங்கியது ஆஃபர்கள்: சமீபத்தில் தீபாவளி பண்டிகைக்கு, தமிழகத்தின் கடைகளில், ஆஃபர்கள் போடப்பட்ட நிலையில், கோவை லுலுவிலும் தீபாவளி சிறப்பு விற்பனையை வெளியிட்டிருந்தனர். அதன்படி, 60 சதவீதம் வரை தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது..
அதுமட்டுமல்ல, ஜெக்ஸ் என்ற புதிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அறிமுக விழா நடத்தப்பட்டிருந்தது.. இதில், havells, Bosch, dcl, vidiem, போன்ற நிறுவனங்களின் புதிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததுடன், 5000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குவோருக்கு, 500 ரூபாய்க்கான பரிசு கூப்பன்களை அறிவித்து பலரையும் கவர்ந்திழுத்தது.
இதில், புதிதாக திருமணமான 50 தம்பதிகளுக்கு, ரூ.1999 க்கு மேல் பொருட்கள் வாங்கினால் அரை கிராம் தங்க காசு பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்ததால், கோவையே திக்குமுக்காடிவிட்டது. அதிகளவிலான பொருட்களை தொடர்ந்து வாங்கி வருபவர்களுக்கு பிரம்மாண்டமான பரிசுகளை வழங்கி வருவதுடன், சமீபத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு கார் ஒன்றை பரிசாக தந்து, மொத்த பேரையும் திகைக்க வைத்துவிட்டது லுலு நிறுவனம்.
தள்ளுபடி: இந்த பரிசு பொருட்களை வாங்குவதற்காகவே, மக்கள் லுலுவில் குவிந்து வருகிறார்களாம்.. இப்போதுகூட, பண்டிகை கால சிறப்பு தள்ளுபடியை தொடர்ந்து அறிவித்தபடியே உள்ளது.. அந்தவகையில் தற்போது, லுலு மாலில் பெண்களை கவரும் வகையில் "பியூட்டி பெஸ்ட்" என்ற அழகு சாதனப்பொருட்களுக்கு 50 சதவீத தள்ளுபடி விலையில் பொருட்கள் அனைத்தும் தரப்படுகிறதாம்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே பெண்கள் கூட்டம் லுலுவில் நிறைந்து வருகிறது.. வருகிற 3-ந் தேதி வரை மட்டுமே இந்த தள்ளுபடி என்பதால், விற்பனையும் சூடுபிடித்துள்ளது.. 50 சதவீத தள்ளுபடியோடு கேஷ்பேக் ஆபரும் அறிவிக்கப்பட்டுள்ளதால், லுலு மால் நாளெல்லாம் படுபிஸியாக காணப்படுகிறதாம்.
சென்னை லுலு: கோவைக்கு அடுத்தபடியாக சென்னையிலும் லுலு மால் திறக்க ஏற்பாடு நடப்பதாக தெரிகிறது.. ஆனால், இதற்கு வணிகர் சங்கங்கள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை வலிய பதிவு செய்து கொண்டிருக்கின்றன.
'சென்னையில் லுலு திறக்க அனுமதிக்க மாட்டோம், இது வணிகர்களின் தற்கொலை, மனித உரிமை மீறல்கள் பாதிப்புகள் இனி எங்கும் நடக்காது, அதற்கான குழு அமைத்து தீவிரமாக கண்காணிப்போம்" என்று ஏற்கனவே கொந்தளித்திருந்தார் விக்கிரமராஜா.
அதேபோல, லுலு மார்க்கெட்டை தமிழ்நாட்டை விட்டே விரட்டும் வகையில், தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications