சுந்தராபுரத்தில் மேம்பாலம்.. சர்ப்ரைஸ் கொடுத்த ஆதவ் அர்ஜுனா.. கோவையில் தவெக சிக்ஸர்

Subscribe to Oneindia Tamil

கோவை: இந்தியாவில் வேகமாக முன்னேறும் இரண்டாம் கட்ட நகரங்களில் கோவை முதன்மையான இடத்தில் உள்ளது. பல்வேறு துறைகளில் கோவை முன்னேற்றமடைந்து கொண்டிருக்கிறது. விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில், மேம்பாலங்கள், புறவழிச்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுந்தராபுரம் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதற்கு சட்டமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து வேகமாக முன்னேறும் மாவட்டமாக கோவை உள்ளது. கல்வி, தொழில், மருத்துவம், ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோவை வளர்ச்சியடைந்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, உக்கடம், காந்திபுரம், தடாகம் சாலை, மருதமலை சாலை, பொள்ளாச்சி சாலை உள்பட பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

Aadhav Arjuna Sundarapuram flyover

சுந்தராபுரத்தில் மேம்பாலம்


கோவையின் உள்கட்டடைப்பு வசதி மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. காலை, மாலை பீக் ஹவர்களில் வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையில் நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் காந்திபுரம், உக்கடம், திருச்சி சாலை, அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலைகளில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் சரவணம்பட்டி, சிங்காநல்லூர், லாலிரோடு, சுந்தராபுரம் பகுதிகளில் மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்தன. ஆனால் திமுக ஆட்சியில் அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. சாய்பாபாகாலனி பகுதயில் மட்டுமே திமுக அரசு மேம்பாலம் கட்டியது. தேர்தல் நேரத்தில் தவெக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. குறிச்சி முதல் சுந்தராபுரம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அந்த பகுதியை சுற்றி ஏராளமான கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதியடைகிறார்கள்.


ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

கிணத்துக்கடவு தொகுதி எம்எல்ஏவும், மதுவிலக்குத்துறை அமைச்சருமான விக்னேஷ், குறிச்சி குளம் முதல் சுந்தராபுரம் வரை மேம்பாலம் அமைக்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி கொடுத்திருந்தார். தவெக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து சுந்தராபுரம் பகுதியில் மேம்பாலம் அமைப்பது குறித்து விக்னேஷ் கோரிக்கை வைத்தார்.

சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, குறிச்சி குளம் முதல் சுந்தராபுரம் சிட்கோ வரை மேம்பாலம் அமைக்கப்படும். அதற்கான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என கூறினார். சட்டமன்ற நிகழ்வுக்கு பிறகு அமைச்சர் விக்னேஷ், ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து நன்றி தெரிவித்தார். குறிச்சி, சுந்தராபுரம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படவுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+