மதபோதகர் ஜான் ஜெபராஜை தொடர்ந்து.. அவரது உறவினரும் கைது.. பாதிக்கப்பட்ட சிறுமிகள் பகீர் வாக்குமூலம்
கோவை: இரண்டு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மூணாறில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஜான் ஜெபராஜின் உறவினரையும் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் மதபோதகரான ஜான் ஜெபராஜ் (37). இவர் கோவை மாவட்டத்தில் உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியில் தங்கியுள்ளார். காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள ஆலயத்தில் கிறிஸ்தவ மதபோதகராக இருந்து வந்தார். இவரது நடவடிக்கைக்கு சக மத போதகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் இருந்து வந்தன.

மதபோதனை நிகழ்ச்சிகளை இசைக் கச்சேரிகள் போல நடத்தி தானும் ஆடி, மக்களையும் ஆடவைத்து மதபோதனை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ஜான் ஜெபராஜ் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில், ஜான் ஜெபராஜ் வீட்டில் கடந்த ஆண்டு மே மாதத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அப்போது, அதில் கலந்துகொண்ட 17 வயது சிறுமி மற்றும் அவருடைய தோழியான 14 வயது சிறுமிக்கும் ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின்பேரில் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து, தலைமறைவான மதபோதகர் ஜான் ஜெபராஜை கோவை, செங்கோட்டை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே ஜான் ஜெயராஜ் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்வதாகவும் தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமான நிலையங்கள், துறைமுகங்கலில் ஜான் ஜெபராஜுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கேரள மாநிலம், மூணாறு பகுதியில் தலைமறைவாக இருந்து வந்த ஜான் ஜெயராஜை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். கோவை காந்திபுரம் மகளிர் காவல் நிலையத்துக்கு ஜான் ஜெபராஜ் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜான் ஜெபராஜின் உறவினரான கோவை மாவட்டம், துடியலூர் பகுதியை சேர்ந்த பெனட் ஹரீஸ் (32) என்பவரை கோவை மாநகர மத்திய அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications