Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிடிஎப் வாசன் பிரச்சனையில் சிக்கவில்லை.. பிரச்சனை தான் டிடிஎப் வாசனிடம் சிக்கியிருக்கு.. பாருங்க

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையைச் சேர்ந்த பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன் என்ன செய்தாலும் அது சர்ச்சையில் முடிகிறது. பைக்கில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று வீடியோ போட்டு வந்தவர் டிடிஎப் வாசன். இவர் பைக்கில் அதிவேகமாக சென்ற வீடியோக்களால் சிறைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஒவ்வொரு வீடியோவுக்கும் ஒரு பிரச்சனை டிடிஎப் வாசனை தேடி வந்தது. இந்நிலையில் மலைப்பாம்புடன் போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் டி.டி.எப்.வாசன் வீட்டில் வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளார்கள்.

கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காட்டை சேர்ந்த டி.டி.எப்.வாசன்,பிரபலமான யூடியூபர் ஆவார். இவர், விலையுயர்ந்த சொகுசு பைக்கில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்வார். லடாக் பயணம் தொடங்கி காஷ்மீர், டெல்லி உள்பட பல்வேறு இடங்களுக்கு பைக்கில் சென்று வந்து வீடியோக்களை பதிவிடுவார். பைக்கில் செல்லும் போது அதிவேகமாக சென்றும், சாகசம் செய்து பயணிப்பதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருந்தார். இதற்காக வழக்குகளில் சிக்கினார். ஒரு வழக்கு, இரு வழக்கு அல்ல.. பல வழக்கில் சிக்கினார்.

coimbatore ttf vasan youtuber

காஞ்சிபுரம் அருகே நடந்த விபத்தின் காரணமாக கை உடைந்த நிலையில், கைதும் செய்யப்பட்டார். அப்போது அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. அடுத்ததாக காரை அஜாக்கிரதையாக ஓட்டியும் அதனை வீடியோவாக யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி வழக்கை சந்தித்தார். இப்படி பல பிரச்சனைகளால் வீடியோவால் சிக்கி தவித்தார்.

இந்தநிலையில் யூடியூபர் டி.டி.எப்.வாசன் சமீபத்தில் மலைப்பாம்பை கையில் வைத்து போஸ் கொடுத்தபடி வீடியோ வெளியிட்டார். மேலும் அந்த வீடியோவில், தான் அந்த மலைப்பாம்பை உரிமம் பெற்று வளர்த்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.. இதையடுத்து சென்னை வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே டி.டி.எப்.வாசனின் சொந்த ஊரான கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காட்டில் உள்ள அவரது வீட்டிற்கு காரமடை வனத்துறையினர் நேற்று நேரில் சென்று சோதனை நடத்தினர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "மலைப்பாம்புடன் போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக யூடியூபர் டி.டி.எப்.வாசன் வீட்டில் வனத்துறை சார்பில் சோதனை செய்தோம். அவர் வீட்டில் வனத்துறையால் தடை செய்யப்பட்ட விலங்குகள், பிராணிகளை வளர்த்து வருகிறாரா என்பது குறித்து ஆய்வு செய்தோம் . ஆனால் அப்படி எந்த விலங்குகளும், பிராணிகளும் அவர் வீட்டில் இல்லை. இந்த சோதனை தொடர்பான விவரங்களை சென்னை வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளோம்' என்று கூறினார்கள்.

வனத்துறை சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள்,டிடிஎப் வாசன் பிரச்சனையில் சிக்கவில்லை.. பிரச்சனை தான் டிடிஎப் வாசனிடம் சிக்கியிருக்கு என்று விமர்சித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+