கோவை அருகே கோர விபத்து.. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற நண்பர்கள் 5 பேர் பரிதாப பலி
கோவை: கோவை பேரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தில் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் சென்ற நண்பர்கள் 4 பேர் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பிரபாகரன் (19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
கோவை செட்டிப்பாளையம் அடுத்த சிறுவாணி சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நண்பர்களான பிரகாஷ் (22), ஹரிஷ் (21), சபரி (21), அகத்தியன் (20) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். பிரபாகரன் (19) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்றபோது விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மதுபோதையில் அதிவேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பிரபாகரன் (19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவை அருகே 5 பேர் உயிரிழந்த கார் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications