ஆவேசமாக கலெக்டர் ஆபீசுக்கு வந்த 4 பாட்டிகள்.. அதிலும் 97 வயது முருகம்மாள் இருக்காரே.. ஆடிபோன மக்கள்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் 4 பாட்டிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்
கோவை: கொடுமை.. 4 வயசான பாட்டிகளும் மண்ணெண்ணெய்யை உடம்பில் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி விட்டது.
கோவை அன்னூரை அடுத்த குப்பனூர் பகுதியை சேர்ந்தவர் முருகம்மாள்.. 97 வயதாகிறது.. இவருக்கு மாரக்காள் 75, லட்சுமி 70, பாப்பாத்தி 65, என்ற மூன்று மகள்களும், ரங்கசாமி 55 என்ற மகனும் உள்ளார்.

முருகம்மாளுக்கு 12 ஏக்கரில் இடம் இருந்துள்ளது... ஆனால், இதனை ரங்கசாமி ஏமாற்றி எழுதி வாங்கி கொண்டாராம்.. இந்நிலையில் ரங்கசாமி ஒருநாள் இறந்துவிட்டார்.. அதனால், அவரது மனைவியான பாப்பாத்திக்கு, மாமியார் முருகம்மாளை பராமரிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது,.
ஆனால், அவர் சரியாகவே முருகம்மாளை கவனிக்கவில்லையாம்.. அந்த இடத்தையும் திருப்பி கொடுக்க முடியாது என்று தானே எடுத்து கொண்டாராம்.. இதனால், மனம் நொந்து போன முருகம்மாள் இது சம்பந்தமாக கலெக்டரிடம் மனு அளித்திருக்கிறார்.. ஒரு வருஷமாகிறதாம்.. ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை போல தெரிகிறது.

அதனால், வெறுத்து போன முருகம்மாள், தன்னுடைய 3 மகள்கள் மாரக்காள், லட்சுமி மற்றும் பாப்பாத்தியை அழைத்து கொண்டு இன்று கோவை கலெக்டர் ஆபீசுக்குள் நுழைந்தார்... அப்போது 4 பேருமே ஆவேசமாக காணப்பட்டனர்.. அதில், முருகம்மாள் பாட்டிதான் உச்சக்கட்ட கோபத்தில் இருந்தார்.. இவர்கள் எல்லார் கையிலும் மண்ணெண்ணை கேன்கள் இருந்தன.. கரெலக்டர் அலுவலக வளாகத்துக்கு வந்த 4 பாட்டிகளும், அந்த மண்ணெண்ணையை தங்கள் உடம்பில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.
இதனை பார்த்த பதறி போன பாதுகாப்பு போலீசார் பாட்டிகளை ஓடிச்சென்று காப்பாற்றினர்.. உடனடியாக தண்ணீரை பிடித்து அவர்களின் மேல் ஊற்றினர்.. பிறகு, 4 பாட்டிகளையும் அழைத்து சென்று கலெக்டர் ஆபிசின் முன்பு உட்கார வைத்தனர்.. இது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.. ஆனால் கொஞ்ச நேரத்தில் இந்த பாட்டிகள் சம்பவத்தினால் கோவை பகுதியே வெலவெலத்து போய்விட்டது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications