சினிமா பாணி பேச்சு.. சோஷியல் மீடியா அறிவு.. கொஞ்சம் காமெடி.. டெக்னாலஜியை வைத்து கலக்கும் கமல்!
லோக்சபா தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் நடத்திய முதல் கூட்டமே மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
கோயம்புத்தூர்: நேற்று கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக அதன் தலைவர் கமல்ஹாசன் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சமூக வலைத்தளத்தையும்,டெக்னாலஜியையும் அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் என்று குறிப்பிட வேண்டும்.
நேற்று கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மிக முக்கியமான விஷயங்கள் குறித்து பேசினார்.
லோக்சபா தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் நடத்திய முதல் கூட்டமே மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
வி.ஐ.பி தொகுதியாக மாறிய சிவகங்கை.. வெற்றி யாருக்கு?

என்ன கூட்டம்
இந்த பிரச்சார பொதுக்கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் நிறைய எண்ணிக்கையில் மக்கள் கூட்டம் கூடியது. அதிமுக, திமுக, அமமுகவிற்கு கூடும் அளவிற்கு மக்கள் நீதி மய்யத்திற்கும் பெரிய அளவில் கூட்டம் கூடி இருக்கிறது. தேர்தல் அறிவித்த பின், மக்கள் நீதி மய்யம் நடத்திய மிகப்பெரிய முதல் கூட்டம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர்
இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் டெக்னாலஜியை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் கூற வேண்டும். மெரினா போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, தமிழிசை வீடியோ என்று வரிசையாக இணையத்தில் வைரலான வீடியோக்களை, பெரிய திரையில் கமல்ஹாசன் ஒளிபரப்பினார். மக்கள் இதை பார்த்து கரகோஷம் எழுப்பினார்கள். பொதுவாக வீடியோக்களை கட்சிகள் எதுவும் மேடையில் ஒளிபரப்பியது இல்லை. ஆனால் கமல்ஹாசன் அந்த வழக்கத்தை முறியடித்து இருக்கிறார்.

சோஷியல் மீடியா
அதேபோல் சோஷியல் மீடியாவில் தினமும் நடக்கும் விஷயங்களை கமல்ஹாசன் கரைத்து குடித்து இருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். பாஜகவிற்கு எதிராக, திமுகவுக்கு எதிராக, அதிமுகவிற்கு எதிராக வைரலான எல்லா ஹேஷ்டேக்குகளையும் கமல்ஹாசன் நியாபகமாக குறிப்பிட்டு நேற்று பேசினார். கோ பேக் மோடி குறித்து அடிக்கடி கமல்ஹாசன் பேசினார்.

சினிமா பாணி
அதேபோல் சினிமா பாணியிலும் கமல்ஹாசன் கொஞ்சம் பேசுகிறார் என்றுதான் கூற வேண்டும். உன்னைப்போல் ஒருவன் படத்தில் வருவதை போலவே கமல்ஹாசன் நேற்று தனது பேச்சை பல தேதிகளை குறிப்பிட்டு தொடங்கினார். இது எல்லாம் உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிவிட்டுதான் தனது பேச்சை தொடங்கினார். சினிமா நடிப்பு அனுபவம் அவருக்கு பெரிய அளவில் உதவுகிறது என்றுதான் கூற வேண்டும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications