வீடியோவை தூக்குங்க! கோபி - சுதாகர் பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார்
கோவை: கோபி, சுதாகரின் பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இரு குடும்பங்கள் இடையேயான மோதலை இரு சமூக மோதலாக சித்தரிப்பதாக கூறி, கோவையை சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சொசைட்டி பாவங்கள் என்ற பெயரில் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் வீடியோ வெளியாகியிருந்தது.
நெல்லை மாவட்டம் கவின் படுகொலை சம்பவத்துக்கு பிறகு, ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஜாதி ஆணவ கொலையை தூண்டிவிடும் சக்திகளுக்கு எதிராக நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

கோவை மாநகர காவல் ஆணையகரத்தில் புகார்
இந்த நிலையில்தான், கவின் ஆணவப் படுகொலை குறித்து பிரபல யூடியூபர்களான 'பரிதாபங்கள்' கோபி- சுதாகர் தங்கள் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் கிண்டல் வீடியோவானது, பெரும்பாலானோரின் வரவேற்பை பெற்று வருகிறது. சமூகத்தில் பொதுவான விஷயங்கள் குறித்து பகடியாக வீடியோ பதிவிட்டு பல லட்சக்கணான பாலோயர்களை பெற்ற பரிதாபங்கள் சேனலில் சாதிய ரீதியிலான ஆணவப்போக்கை விமர்சிக்கும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ பெரும் வரவேற்பை பெற்றது.
யூடியூப்பில் லட்சக்க்கணக்கான பார்வையாளர்களை இந்த வீடியோ பெற்றுள்ள நிலையில், பரிதாபங்கள் சேனலுக்கு எதிராக கோவை மாநகர காவல் ஆணையகரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இரு குடும்பங்கள் இடையேயான மோதலை இரு சமூக மோதலாக சித்தரிப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு செய்த பிறகே நடவடிக்கை
அந்த புகார் மனுவில், பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இரு சமூகத்தினர் இடையே பிரச்சனையை உருவாக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களை குறிப்பிட்டு அந்த சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள். அந்த வீடியோவை யூடியூப் தளத்தில் இருந்து நீக்க வேண்டும். மேற்கொண்டு இதுபோன்ற வீடியோக்கள் வெளியிடாதவறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர் பெயரில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. பரிதாபங்கள் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் ஏதேனும், சமுதாயத்தை நேரடியாக குறிப்பிட்டுள்ளார்களா? ஏதேனும் குறியீடுகளை வைத்துள்ளார்களா? இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் கருத்து உள்ளதா? என்பதை ஆய்வு செய்த பிறகே இவ்விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை போலீசார் மேற்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
மிளகாய்ப்பொடியை தூக்கி போட்டுத்தானே
இந்த புகாரை அளித்த வழக்கறிஞர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பரிதாபங்கள் சேனலில் வெளியிட்டுள்ள சொசைட்டி பாவங்கள் வீடியோ ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்குவது போல உள்ளது. இந்த வீடியோ எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுப்பது போல உள்ளது. இதை வைத்து நிறைய மீம்ஸ்கள் போடுகிறார்கள். அதில் குறிப்பாக கவின் கொலையை குறிப்பிடுவது போல மிளகாய்ப்பொடியை தூக்கி போட்டுத்தானே வெட்டினாய்.
அவனிடம் ஒரு அரிவாள் கொடுத்து நேருக்கு நேர் வெட்டிக்கொள்ள வேண்டியதுதானே என்று வன்முறையை தூண்டக்கூடிய வகையில் உள்ளது. இந்த சேனலில் உள்ள வீடியோவை உடனே டெலிட் செய்ய வேண்டும். பரிதாபங்கள் சேனலை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாங்கள் மனு கொடுத்துள்ளோம். இது ஒரு குடும்பத்திற்குள் உள்ள பிரச்சினை. அதை சமூக பிரச்சினை போல சித்தரிக்கிறார்கள். என்று கூறியுள்ளார்.
சாதிய பாகுபாட்டு மன நிலையை விமர்சிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டதில் கோபி சுதாகருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வரக்கூடிய சூழலில் தற்போது கோவை மாநகர காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications