Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவைக்கு பிறந்தது விடிவுகாலம்.. மோசமான சாலைகள் அடியோடு மாற போகுது.. கோயம்புத்தூர் மக்கள் செம ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாநகருக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்க போகிறது.. ரூ.195.63 கோடியில், மோசமான மாநகர சாலைகளை சீரமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மகிழ்ச்சி தகவல்தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேவையான இடங்களில் திட்ட சாலைகள் மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநகரின் முக்கிய இடங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, புதிய திட்ட சாலைகள் ஏற்படுத்த மாநகராட்சியால் முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், கருத்துரு தயாரித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

coimbatore kovai city roads

கோவை சாலைகள்: அதேபோல, கோவை மேற்கு ரிங் ரோடு சாலை திட்டங்கள் வேகமெடுத்து வருகின்றன.. கடந்த ஆகஸ்ட் 2023 இல் தொடங்கப்பட்ட மேற்கு சுற்றுச் சாலை எனப்படும் மேற்கு புறவழிச்சாலை பணிகள், கிட்டத்தட்ட 60 சதவீதத்தை தாண்டி நடந்துள்ளதாக தெரிகிறது.. எனவே, எப்படியும், வரும் செப்டம்பர் 2025க்குள் மொத்த பணிகளும் முடிவடையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதேபோல, கோவை மாநகரில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க ரூ.106 கோடி நிதி, இரண்டாம் கட்டமாக ஒதுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு உட்கட்டமைப்பு திட்டம் (டூரிப்) திட்டத்தின்கீழ் ரூ.50¾ கோடி, நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் (என்எஸ்எம்டி) திட்டத்தின் கீழ் ரூ.28¾ கோடி, மாநில மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.26½ கோடி உள்பட 203 கிமீ தூரத்திற்கு சாலைகள் சீரமைக்க மொத்தம் ரூ.106 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

கோவை நகரப்பகுதி: இது ஒருபுறமிருக்க, கோவை நகரப் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க, பாதாள சாக்கடை குழாய் மற்றும் இணைப்பு வழங்க தோண்டப்பட்ட சாலைகள், போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகின்றன.. குழிகள் தோண்டி குழாய் பதித்திருப்பதால், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

இது மண் சாலையாக இருப்பதால், மழைக்காலங்களில் நிலைமை இன்னும் மோசமாகிவிடுகிறது. கால் வைக்கக்கூட இடமில்லாத அளவுக்கு சேறும் சகதியுமாகிவிடுகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் சில தினங்களுக்கு முன்பு, முதல்வர் ஸ்டாலின் கோவை வந்திருந்ததுடன், சாலைகளின் நிலைமையையும் நேரில் பார்வையிட்டு, 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கியும் உத்தரவிட்டார்..

அனுமதி கோரிக்கை: இதையடுத்து, 466.53 கி.மீ., நீளத்துக்கு தார் ரோடு போட முடிவு செய்யப்பட்டு, இதற்காக ரூ.195.63 கோடி செலவாகும் என்று மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.. இதற்கான நிர்வாக அனுமதியும், நிதி ஒதுக்குமாறு கோரியும், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகத்துக்கு, மாநகராட்சியிலிருந்து கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அத்துடன், மேற்கு மண்டலத்துக்கு ரூ.52.82 கோடி, வடக்கு - ரூ.47.23 கோடி, கிழக்கு - ரூ.44.28 கோடி, தெற்கு - ரூ.32.54 கோடி, மத்திய மண்டலத்துக்கு ரூ.18.76 கோடி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாம்.

சிறப்பு நிதி: முதல்வர் ஸ்டாலினே நேரடியாக அறிவித்த சிறப்பு நிதி என்பதால், விரைவில் ஒதுக்கப்பட்டுவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. எனவே, இந்த சாலைகளின் பணிகளை துரிதமாக மேற்கொள்ள மாநகராட்சி பொறியியல் பிரிவினர் மிக தீவிரமாக திட்டமிட்டு வருகிறார்களாம்.

கோவை மாநகருக்கு 466.53 கி.மீ., நீளத்துக்கு தார் ரோடு போட முடிவு செய்யப்பட்டு, இதற்காக ரூ.195.63 கோடி செலவாகும் என்று மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.. அத்துடன், மேற்கு மண்டலத்துக்கு ரூ.52.82 கோடி, வடக்கு - ரூ.47.23 கோடி, கிழக்கு - ரூ.44.28 கோடி, தெற்கு - ரூ.32.54 கோடி, மத்திய மண்டலத்துக்கு ரூ.18.76 கோடி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+