Hari Nadar Arrest: கோவை தொழிலதிபரை ஸ்கெட்ச் போட்டு ஏமாற்றிய ஹரி நாடார் - தட்டித் தூக்கிய போலீஸ்
கோவை: கோவை தொழிலதிபரை மோசடி செய்த வழக்கில் பனங்காட்டுப்படை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சென்னை தொழிலதிபர் மோசடி வழக்கில் அவர் சிறையில் உள்ளார். இந்நிலையில் ஹர நாடாரை 2 நாட்கள் காவல்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்றத்தில் ஹரி நாடார் சொன்ன கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது [Hari Nadar Arrest].
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரி நாடார். நடமாடும் நகைக்கடை போல ஏராளமான நகைகளை அணிந்து வலம் வரும் அவர் மீது ஏராளமான வழக்குகளும் உள்ளன. நகைகளை போலவே வழக்குகள், கைது, சர்ச்சைகள் ஆகியவற்றையும் அவரிடம் இருந்து பிரிக்க முடியாது. பனங்காட்டுப்படை என்கிற பெயரில் அரசியல் கட்சியும் நடத்தி வருகிறார்.

ஹரி நாடார் வழக்கு
ஹரி சில தேர்தல்களில் போட்டியிடவும் செய்துள்ளார். பலரிடம் மோசடி செய்த வழக்குகள் அவர் மீது உள்ளன. அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு கடன் வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதே பாணியில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றிய வழக்கில் ஹரி நாடார் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசாமி என்பவர் ஹரி நாடார் மீது பீளமேடு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்து இருந்தார்.
கோவை தொழிலதிபர் மோசடி
அதில், "நான் கோவையில் அல்ட்ரா ரெடிமிக்ஸ் கான்கிரீட் நிறுவனம் நடத்தி வருகிறேன். அந்த நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக எனக்கு ரூ.25 கோடி பணம் தேவைப்பட்து. நண்பர்கள் சொன்னதால் ஹரி நாடாரை அணுகினேன். அப்போது அவர், சேலம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த செந்தில் வாசன் மூலம் கடன் ஏற்பாடு செய்து தருவதாக கூறியிருந்தார்.
இதற்காக கமிஷன் மற்றும் ஆய்வு செலவுகள் என்ற கூறி ரூ.67 லட்சம் பணம் வாங்கினார். மேலும் எனக்கு முதல் கட்டமாக ரூ. 12.50 கோடி தயாராக இருக்கிறது என்று ஆவணங்களை காட்டினார். அதனை நம்பி நானும் அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன். ஆனால் அதன் பிறகு ஹரி நாடார் என்னுடனான தொடர்பை துண்டித்துவிட்டார்.
மீண்டும் கைது [Hari Nadar Arrest]
இதுகுறித்து வங்கியில் விசாரித்தபோது அவர் கொடுத்த டிடி போலி என்று தெரிய வந்தது. எனவே என்னை மோசடி செய்த ஹரி நாடார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். அவரின் புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
சென்னை தொழிலதிபர் மோசடி வழக்கில் ஹரி நாடார் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவரை கோவை வழக்கிலும் காவல்துறையினர் கைது செய்தனர். இதற்காக ஹரி நாடார் சென்னை சிறையில் இருந்து இன்று மாலை கோவை இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பரபரப்பு வாக்குமூலம்
கோவை காவல்துறையினர் ஹரி நாடாரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஹரி நாடாரை இரண்டு நாட்கள் விசாரிக்க காவல்துறையினருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். இதனால் கோவை காவல் துறையினர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அடுத்தடுத்து வழக்குகளில் கைது செய்யப்பட்டிருப்பது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த ஹரி நாடார், "இந்த வழக்கு பொய் வழக்கு. நான் வருகிற சட்டமன்ற தேர்தலில் நிற்கிறேன் என்பதற்காக காவல்துறையினர் மூலம் என்னை முடக்குவதற்கு முயற்சிக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
-
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
கோவையில் கியாஸ் சிலிண்டர் அடாவடி: மத்திய அரசு விதியை மீறி 36 நாட்களாக உயர்வு.. இல்லத்தரசிகள் ஷாக் -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம்












Click it and Unblock the Notifications