கோவையில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம்- ஐகோர்ட் அதிரடி ஆர்டர்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாநகராட்சியில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களை பணி நீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடாக நியமிக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

கோவை மாநகராட்சியில், கடந்த அதிமுக ஆட்சியில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, தேர்வு நடைமுறைகளை பின்பற்றாமல் 54 இளநிலை உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

High Court

இந்நிலையில், இன்று இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கோவை மாநகராட்சியில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், காலியான பணியிடங்களுக்கு தகுதியானவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், முறைகேடான பணி நியமனங்களுக்கு துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+