கோவையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கைது!
இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து நடத்த முயன்ற அர்ஜூன் சம்பத்தை கோவை போலீசார் கைது செய்தனர். இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகனும், கட்சியின் மாநில இளைஞரணி தலைவருமாக இருப்பவர் ஓம் கார் பாலாஜி. கடந்த 27 ஆம் தேதி கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓம்கார் பாலாஜியும் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஈஷாவுக்கு எதிராக செய்தி வெளியிடும் நக்கீரன் ஆசிரியர் கோபால் குறித்தும், அவரது நாக்கு அறுக்கப்படும் என்றும் ஓம் கார் பாலாஜி பேசியிருந்தார்.

இதுதொடர்பாக, திமுக பிரமுகர் அளித்த புகாரின்பேரில், கோவை பந்தய சாலை காவல் துறையினர் ஓம்கார் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓம்கார் பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கைது செய்ய இடைக்கால தடையை நீட்டிக்க மறுத்ததோடு, முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த ஓம்கார் பாலாஜியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த நிலையில், ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து, பந்தயசாலை காவல் நிலையம் முன்பு அர்ஜூன் சம்பத் தலைமையில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் தடையை மீறி போராட வந்த அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார். மேலும், ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 20 க்கும் மேற்பட்டோரையும் போலீசார் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications