கோவை பெரியார் உணவகம் தாக்குதல்.. பின்னணியில் இந்து முன்னணி! கைதான 6 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு
கோவை: காரமடை அருகே கண்ணார்பாளையத்தில் புதிதாக தந்தை பெரியார் பெயரில் திறக்கப்பட்ட உணவகம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைதான நிலையில், கைது செய்யப்பட்ட 6 பேரும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ளது கண்ணார்பாளையம் பகுதி. இங்குள்ள நால் ரோட்டில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை நேற்று திறந்தார். திறப்பு விழாவை முன்னிட்டு ஊழியர்களுடன் நேற்று உணவகத்தில் சிறப்பு ஏற்பாடுகளை பிரபாகரன் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு உள்ளே சென்ற ஒரு கும்பல் பெரியார் உணவகத்தின் உரிமையாளர் பிரபாகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. அப்போது கடையின் உரிமையாளரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். அத்துடன் அந்த கும்பல் ஹோட்டலையும் அடித்து நொறுக்கி இருக்கின்றனர்.

உணவகம் மீது தாக்குதல்
கடையில் இருந்த உரிமையாளர் பிரபாகரனை கடுமையாக தாக்கிய அந்த கும்பல், அங்கிருந்த கடை ஊழியர் அருண் என்பவர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். உரிமையாளர் மற்றும் ஊழியரை தாக்கிவிட்டு உணவகத்தை துவம்சம் செய்த அந்த ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

படுகாயம்
இந்த தாக்குதலில் உணவக ஊழியர் அருண் படுகாயமடைந்து காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு 36 தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடையின் உரிமையாளர் பிரபாகரனும் காயங்கள் காரணமாக சிகிச்சை பெற்றார்.

காவல்நிலையத்தில் புகார்
இச்சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இவர்களை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பெரியாரிய அமைப்புகள் சமூக வலைதளங்களிலில் வலியுறுத்தி வந்தனர்.

இந்து முன்னணி
இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட ரவிபாரதி, சரவணகுமார், சுனில், விஜயகுமார், பிரபு, பிரபாகரன் ஆகியோரை காரைமடை போலீசார் கைது செய்து உள்ளனர். கைதான 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்கள் அனைவரும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கைதானவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்தல், ஆபாசமாக பேசியது, அத்துமீறியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications