மதக்கலவர கோஷம்.. கோவை விநாயகர் ஊர்வலத்தில் பதற்றம்! அத்துமீறிய இந்து முன்னணி நிர்வாகி கைது
கோவை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு மதக்கலவரத்தை தூண்டும் வகையில் முழக்கம் எழுப்பிய இந்து முன்னணி நிர்வாகியை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த ஆகஸ்டு 31 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அடுத்தடுத்த நாட்களில் விநாயகர் சிலைகளை குடியிருப்பு பகுதிகளில் இருந்து எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

இந்துத்துவ அமைப்புகள்
தமிழ்நாட்டில் குறிப்பாக பொதுமக்கள் அல்லாது இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகிய இந்துத்துவ அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை முன்னெடுத்து செல்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த 31 ஆம் தேதி முதல் விநாயகர் ஊர்வலகங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

பலத்த பாதுகாப்பு
மாநிலம் முழுவதும் அமைதி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு அணிவகுப்பு ஊர்வலத்தை காவல்துறை நடத்தி இருக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத மோதல்கள் ஏற்படுவதை தவிர்க்க உயர்நீதிமன்றமும், அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. பிற மதத்தினருக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

கோவை ஊர்வலம்
இந்த நிலையில் கோவை வைசியாள் வீதி மற்றும் சலீவன் வீதியில் கடந்த 4 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இந்து முன்னணி அமைப்பினர் நடத்திய இந்த ஊர்வலகத்தில் கலந்துகொண்ட நபர் இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் முழக்கப்பட்டனர்.

இந்து முன்னணின் நிர்வாகி
இதனை வீடியோ பதிவு செய்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். சர்ச்சைக்குரிய வகையில் முழக்கம் எழுப்பியவர் பெயர் சந்தோஷ் (24) என்பதும், இவர் இந்து முன்னணியின் செல்வபுரம் பகுதி செயலாளர் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications