கோவை தொழில் அதிபர் வீட்டில் கைவரிசை.. 'கீரிப்பிள்ளை வடிவேலு' பாணியில் சிக்கிய ஊட்டி சாலமன்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை பீளமேட்டில் பிரபல தொழில் அதிபர் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகள், பணம் மற்றும் காரை திருடி சென்ற ஊட்டியைச் சேர்ந்த சாலமன் என்ற இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். முன்னதாக திருடிய காரில் வால்பாறை சென்ற ஊட்டி சாலமன் விபத்தில் சிக்கியிருக்கிறார். அதில் அவருக்கு கைமுறிந்தது. கையில் கட்டுடன் கோவை துடியலூர் பகுதியில் சுற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த 66 வயதாகும் ராமகிருஷ்ணாராவ் தொழில் அதிபர் ஆவார். தொழிலதிபர் ராமகிருஷ்ணாராவின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஆகும். சம்பவ தினத்தன்று ராமகிருஷ்ணாராவ் தனது மனைவியுடன் சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலத்துக்கு போய்விட்டார். வீட்டில் யாருமில்லை என்பதை நோட்டமிட்டு கண்டுபிடித்த கொள்ளையன் ஒருவர், இரவில் வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம் மற்றும் அங்கு நிறுத்தப் பட்டு இருந்த கார் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி சென்றார்.

coimbatore ooty theft

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.. இதில் வீடு புகுந்து திருடியது நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த சாலமன் (29) என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஊட்டி சாலமனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் தீவிரமாக தேடி வந்தநிலையில், ஊட்டி சாலமன், தான் திருடிய காரில் வால்பாறை நோக்கி சென்றதும், அப்போது கார் வால்பாறை சாலையில் விபத்துக்கு உள்ளானதில் சாலமனின் கை முறிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே விபத்தில் காயம் அடைந்ததால் அச்சம் அடைந்த சாலமன் விபத்து நடந்த இடத்திலேயே காரை நிறுத்தி விட்டு தப்பி சென்றிருக்கிறார். இதற்கிடையே சாலமன் வால்பாறையில் இருந்து தப்பி வந்து கோவை துடியலூர் பகுதியில் கையில் கட்டுடன் சுற்றித்திரிந்துள்ளார். இதை கண்டுபிடித்த கோவை பீளமேடு தனிப்படை போலீசார் , ஊட்டி சாலமனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை, ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதான சாலமன் மீது நகை பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டு என 16 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட அவர் ஏற்கனவே 3 முறை குண்டர் தடுப்புசட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்று கோவை பீளமேடு போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+