விஜய் திரிஷா பிரைவேட் போட்டோ எடுக்கிறது தான் உளவுத் துறை வேலையா - பொங்கிய அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

கோவை: விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். கடந்த வாரம் அவர் கோவாவில் ஒரு திருமணத்துக்கு சென்றார். விமான நிலையத்தில் கேட் நம்பர் ஆறில் சோதனைக்கு உட்படுத்திவிட்டு, தனி விமானத்தில் சென்றார். அவரின் பிரைவேட் போட்டோ எப்படி வெளியில் வந்தது. அவர் யாருடன் வேண்டுமானாலும் செல்லலாம். அது அவரின் தனிப்பட்ட விருப்பம். அந்தப் போட்டோவை வெளியிட்டது யார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உதயநிதி தான் வகிக்கக்கூடிய பொறுப்புக்கு ஏற்றவாறு பேச வேண்டும். அவரது நடவடிக்கையை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உதயநிதி, 'இந்தி தெரியாது போடா' என்று சொன்னவர். அவருக்கு அமித்ஷா பேசியது என்ன புரிந்தது.

coimbatore annamalai

அம்பேத்கருக்கு காங்கிரஸ் செய்துள்ள அவமானங்களை அமித்ஷா பட்டியிலிட்டுள்ளார். அம்பேத்கர் வாழ்ந்த இடம் அனைத்தையும் வாங்கி பாஜக மக்கள் வரும் இடமாக மாற்றியுள்ளது. அம்பேத்கர் எனக்கு கடவுள். அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன். காங்கிரஸ் அம்பேத்கருக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது.

35 திமுக அமைச்சர் பட்டியலில் ஏன் பட்டியலின சகோதர சகோதரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏன் காங்கிரஸ் அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் நேரு அம்பேத்கருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். அம்பேத்கருக்கு போடுகிற ஓட்டு குப்பையில் போடுகிற ஓட்டு என்றார் நேரு.

பாஜக இத்தனை ஆண்டுகளில் ஒரு போதும் அம்பேத்கருக்கு எதிராக செயல்பட்டதில்லை. அல் உமா என்பது ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம். பாஷா ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. பொறுப்பில் இருக்க கூடிய அரசியல்வாதிகள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். சீமான் பாஷா ஊர்வலத்தில் கலந்து கொண்டிருக்கிறார். எங்கே அரசியல் செய்ய வேண்டும் என சிந்திக்க வேண்டும்.

1998 குண்டு வெடிப்பால் கோவையின் வளர்ச்சி முற்றிலுமாக தடைபட்டது. இஸ்லாமியர்கள் அனைவரும் நல்லவர்கள். அதில் உள்ள ஒரு சிலர் செய்யும் தீவிரவாதத்தை தான் பாஜக எதிர்க்கிறது. இதை எதிர்த்து நாளை மறுநாள் பாஜக சார்பில் கோவையில் கருப்புக் கொடி பேரணி நடத்த திட்டமிட்டோம். அந்தப் பேரணிக்கு தடை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. கோவை அமைதியாக இருப்பதை திமுக அரசு விரும்பவில்லையா.

விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். கடந்த வாரம் அவர் கோவாவில் ஒரு திருமணத்துக்கு சென்றார். விமான நிலையத்தில் கேட் நம்பர் ஆறில் சோதனைக்கு உட்படுத்திவிட்டு, தனி விமானத்தில் சென்றார். அவரின் பிரைவேட் போட்டோ எப்படி வெளியில் வந்தது. அவர் யாருடன் வேண்டுமானாலும் செல்லலாம். அது அவரின் தனிப்பட்ட விருப்பம். அந்தப் போட்டோவை வெளியிட்டது யார்.

இதுதொடர்பாக பாஜக சார்பில் விமான போக்குவரத்து அமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பவுள்ளோம். வருகிறவர்கள், போகிறவர்களை போட்டோ எடுப்பது தான் மாநில உளவுத்துறையில் வேலையா. போட்டோ எடுத்து அதை திமுக ஐடி விங்குக்கு கொடுக்கும் வேலையை தான் செய்கிறார்களா. ஒரு மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.

விஜய் பாஜகவுக்கு எதிராக பேசினாலும் பரவாயில்லை. இதுதான் திமுக செய்யும் அரசியல் நாகரீகமா. விமானத்தில் பயணம் செய்யும் நபர்களின் விவரம் அவர்களுக்கு எப்படி வந்தது. சிசிடிவி ஆய்வு செய்து அதை யார் போட்டோ எடுத்து, யாருக்கு அனுப்பினார்கள் என ஆய்வு செய்து வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் அரசியலை கவனிக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+