கோவையை உலுக்கிய எம்எல்எம் மோசடி புகார்! பல்லாயிரம் பேர் திரண்டது எப்படி? யார் இந்த My V3 ads கும்பல்

Subscribe to Oneindia Tamil

கோவை : நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக 'My V3 ads' நிறுவனம் மீது புகார் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிறுவனம் ஏன் சர்ச்சைக்கு உள்ளனாது.. நிறுவனம் உருவாக்கப்பட்டது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

யூடியுபில் விளம்பரம் பார்த்தால் லாபம் கிடைக்கும் என்றுதான் மோசடி செய்துள்ளனர். இது 12 லெவல் உள்ள நூதன MLM மோசடி ஆகும். அதாவது உங்களிடம் இந்த நிறுவனத்தின் தலைவர் முதலில் யூடியுபில் விளம்பரம் பார்க்க சொல்வார். நீங்கள் இதில் இணைய ஒரு கட்டணம். அதன்பின் நீங்கள் ஒருவரை சேர்த்து விட வேண்டும். அவர் ஒருவரை சேர்க்க வேண்டும்.

How does the MY V3 ads MLM scam shook whole Coimbatore : What really happened?

எப்படி மோசடி?: இப்படியே உங்களுக்கு கீழ் 12 பேர் சேர்க்கப்பட வேண்டும். இவர்களை சேர்க்க சேர்க்க கமிஷன். அடுக்கடுக்காக கமிஷன் வழங்கப்படும். இதில்தான் பலர் கட்டணம் கொடுத்து சேர்ந்துள்ளனர். இந்த நவீன எம்எல்எம் மோசடியில் பலர் சேர்ந்துள்ளனர். இதில் முறைகேடு நடப்பதாக ஒருவர் புகார் அளித்த நிலையில், அந்த புகார் தொடர்பாக கோவை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

How does the MY V3 ads MLM scam shook whole Coimbatore : What really happened?

மக்கள் போராட்டம்: இந்த நிலையில்தான் நேற்று அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக மக்கள் போராட்டம் செய்தனர். கடைசியில் அது மக்களே இல்லை காசு கொடுத்து அழைத்துவரப்பட்ட கும்பல் என்று கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இருந்து MLM நிறுவனத்துக்கு ஆதரவாக பலர் காசு கொடுத்து கோவையில் திரட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விளக்கம்: இது தொடர்பாக @iRoBo_V3 என்ற ட்விட்டர் ( எக்ஸ்) பக்க பயனர் விளக்கமாக போஸ்ட் செய்துள்ளார். அவர் செய்துள்ள போஸ்டில், ஆந்திரா, விஜயவாடாவில்ல இருந்து இத்தனை பேருந்தில் ஆட்களை இறக்கி இருக்காங்க கோவையில்..! இது பெரிய பிரச்சனையில் போய் முடியும்னு நினைக்கிறேன்..! ஒரு FIRக்காக வேறு மாநிலத்ததில் இருந்து ஆட்களை இறக்கி இருக்கானுங்க..! அவனுங்க க்ரூப்ல பேனர் கட்டாம வாங்க இங்க வந்து முடிவு பண்ணிக்கலாம்னு சொல்லியே வரவச்சிருக்கானுங்க

How does the MY V3 ads MLM scam shook whole Coimbatore : What really happened?

ஒரு MLM கம்பெனிக்காக இவ்வளவும் கூட்டம் கூட,வாகனங்கள் வர அனுமதி யார் கொடுத்தது..! 10 பேர் அமர்ந்து கூட்டம் போட 20 நாட்களுக்கு முன்பே அனுமதி வாங்க வேண்டும் என்ற நிலையிருக்கும் போது இது எப்படி சாத்தியம்..! காவல்துறை அனுமதியும் வாங்காம..எந்த அறிவிப்பும் இல்லாம கூட்டத்தை கூட்டிட்டு..மக்கள் கூடுனாங்கனு சொல்றானுங்க.. வேறு மாவட்டங்கள்ள இருந்து பேருந்து வாடகைக்கு எடுத்து ஆட்கள கூட்டிட்டு வந்துருக்காங்க.. காவல்துறை அனுமதி தரவில்லைனு ஏற்கனவே இன்னொரு வீடியோல சொல்லிருக்காங்க..!

இந்த நிறுவனம் சென்னைல ரிஜிஸ்டர் பண்ணி, அதை கைவிட்டு,அப்புறம் மதுரை, அப்புறமா கோவைல 2023 செப்டம்பர்ல ரிஜிஸ்டர் பண்ணியிருக்காங்க..! GST ப்ராட், மத்த வேலைகளுக்காக நிறைய பன்னிருக்கானுங்க.. பாக்க 3 வருசமா இருக்க மாதிரி தெரியும்.. ஆனா 3 வருசமும் வேற வேற ரிஜிஸ்டரசேன்..!

விளம்பரம் பார்த்தால் காசு,ஆள் சேர்த்துவிட்டா ரெபரல் கமிசன்,12 லெவல்,கோடி,கோடியா வருமானம் இதான் இந்த MLM மோசடியோட பார்முலா..! சட்டத்துல இருந்து தப்பிக்க ஹெர்பல் மருந்துகள் விற்க்ககூடிய கம்பெனியா ரிஜிஸ்டர் பன்னிட்டு நடத்துறாங்க..! ஆனாலும் இந்த கம்பெனி ரிஜிஸ்டர் பன்னினது வேற ஒரு கேட்டகிரில.

How does the MY V3 ads MLM scam shook whole Coimbatore : What really happened?

எப்படி செயல்படுகிறது?: இந்தியாவுல 2019க்கு முன்னாடி வரைக்கும் நிறைய MLM money rotation மட்டும் வச்சி நடத்தினாங்க.. நிறைய குற்றசாட்டுகளுக்கு பிறகு முதலீடு பன்ன கூடிய பணத்துக்கு ஈட பொருள் கொடுக்காம இருக்க MLM எல்லாம் ஸ்கேம்னு அறிவிக்கபட்டது.. பணம் மட்டுமே பிரதானமா இயங்ககூடிய MLM நிறுவனங்கள் அதுல இருந்து தப்பிக்க ஹெர்பல் பொருட்கள்,நேப்கின்,மளிகை பொருட்கள் வச்சி மேக்கப் போட்டு மறைச்சி அதே money rotation வேலைய பன்ன ஆரம்பிச்சாங்க அதுல ஒன்னுதான் myv3ads..

2016-2020 கால கட்டத்துல Apex digital ads இந்த பேர்ல விளம்பரம் பார்த்தால் வருமாணம்,ரெபரல் வருமானம்,கோடி கோடியா சம்பாதிக்கலாம்னு ஆந்திர மாநில பதிவோடோ ஒரு MLM சக்கைபோடு போட்டுச்சி..ப்ளே ஸ்டோரில் apex digital channel னு ஆப் வச்சி நடத்தினாங்க, Myv3adsல இப்ப நடக்குற கூத்து எல்லாம் அப்பவே நடந்துச்சி... அன்ன ஹசாரே எல்லாம் மீட் பன்னி விடியோக்கள்,கெளரவ டாக்டர் பட்டம், மீட்பர் சுரேஸ் இப்படி பல பட்டங்கள் குடுத்தானுங்க மோசடிகள் நடந்தேறியது.. ஒரு நாள் கடைய மூடிட்டு எஸ்கேப்... அப்புறமா வழக்கம் போல மக்கள் காவல்துறை,பொருளாதார குற்றபிரிவுல புகார் குடுத்து போராட்டம்,அரசு எங்கள கண்டுக்கலனு கத்திட்டு கிடந்தாங்க... போன பணம் போனதுதான்..! ஈரோட்ல 2 முகவர்கள அரெஸ்ட் பன்னினாங்க.. அதுல ஏமாந்த மக்கள் இன்னும் மீண்டு வரமுடியாம இருக்காங்க...

How does the MY V3 ads MLM scam shook whole Coimbatore : What really happened?

அதே கம்பெனியோட அதே பார்முலாவ அப்படியே எடுத்துட்டு வந்து இன்னைக்கு ஜிமிக்ஸ் வேலை காட்டிட்டு இருக்க க்ஃம்பெனிதான் MYV3ads..! உகல பொருளாதார காட்பாதர், 5 டாக்டரேட்,5 மாநில கவர்னர் விருது, குருஜி இப்படி எல்லாம் கொரளி வித்தை காட்டிட்டு இருக்காங்க.., என்று இந்த நிறுவனம் குறித்து அவர் புகார் வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+