பலம் காட்டும் விஜய் கட்சி!.. கொங்கு மண்டலத்தில் தவெக எத்தனை தொகுதிகளில் முன்னிலை?
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆட்சியை யார் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன், கோவை மற்றும் கொங்கு மண்டலத்தின் நிலவரமும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், 85.10% வாக்குகள் பதிவாகியுள்ளன. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களம் கண்டுள்ளன. எக்ஸிட் போல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக இருந்தாலும், அதிமுக மற்றும் தவெக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், கொங்கு மண்டலத்தில் தவெக கணிசமான முன்னிலை பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 4 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளது. கோவை வடக்கு, கிணத்துக்கடவு, சிங்காநல்லூர் ஆகிய தொகுதிகளில் கட்சி முன்னிலை வகிக்கிறது. சிங்காநல்லூர் தொகுதியில் 7,313 பெற்று தவெக முன்னிலையில் உள்ளது. அதிமுக 4,820 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. கிணத்துக்கடவு தொகுதியில் 19,645 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. வால்பாறையில் 12,164 பெற்று தவெக முன்னிலையில் உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 3 தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 5 தொகுதிகளில் தவெக முன்னிலை வகிக்கிறது. அவிநாசியில் 12,004, காங்கேயத்தில் 16,148, பல்லடத்தில் 6,317, திருப்பூர் வடக்கு தொகுதியில் 7,921, திருப்பூர் தெற்குத் தொகுயில் 11,154 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 3 தொகுதிகளில் முன்னிலை உள்ளது. சேலம் வடக்கு, சேலம் தெற்கு மற்றும் மேற்கில் தவெக முன்னிலை வகிக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 3 தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்றுள்ளது. குமாரபாளையம் தொகுதியில் 14,558 வாக்குகள் பெற்று தவெக முன்னிலையில் உள்ளது. அதேபோல, ராசிபுரத்தில் 14,788 வாக்குகளும், திருச்செங்கோட்டில் 9,307 வாக்குகளும் பெற்று தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 2 தொகுதிகளில் தவெக முன்னிலை வகிக்கிறது. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் தவெக இதுவரை எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை. மொத்தமாக, கொங்கு மண்டலத்தில் தவெக பல தொகுதிகளில் முன்னிலை பெற்று, மேற்கு தமிழகத்தில் தனது அரசியல் தாக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. இது எதிர்கால அரசியல் சமன்பாடுகளில் முக்கிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
“மக்களை நாய்கள் என்று சொல்லவில்லை.. நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ் விளக்கம்! -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications