Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது ஏன்? எப்படி நடந்தது? அரபிக் கடலில் வீணாக கலக்கும் 6 டிஎம்சி நீர்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம் பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்து அதன் மூலம் 6 டிஎம்சி தண்ணீர் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மதகு உடைந்ததற்கு காரணம் என்ன, யார் மேல் தவறு உள்ளது?

கோவை பொள்ளாச்சி அருகே தமிழகம்- கேரளா எல்லையில் உள்ள பரம்பிக்குளம் அணை. 72 அடி கொள்ளளவை கொண்டது. இந்த அணையில் 17 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு இதன் கொள்ளளவு உள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. அண்மையில் தென்மேற்கு பருவமழையால் பரம்பிக்குளம் அணை முழுவதும் நிரம்பியது. இதையடுத்து 3 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

சங்கிலி

சங்கிலி

இந்த நிலையில் மதகின் நடுவே இணைக்கப்பட்டிருந்த சங்கிலியானது அறுந்துவிட்டது. இதையடுத்து சுவர் இடிந்து மதகு மீது விழுந்தது. இதனால் மதகும் உடைந்துவிட்டது. இதனால் அணையிலிருந்து தண்ணீர் வெளியேறியது. தகவலறிந்த பொதுப் பணித் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவம் இடத்திற்கு சென்றனர்.

தண்ணீர் அளவு

தண்ணீர் அளவு

அப்போது தண்ணீர் அதிகளவு வெளியேறுவதால் கேரளா சாலக்குடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் வெளியேறியது. அந்த மதகு வழியாக தண்ணீர் வெளியேறுவது நின்றால் மட்டுமே மதகை சரி செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அதற்குள் 6 டிஎம்சி தண்ணீர் வீணாகி கடலில் கலக்கும் நிலை உள்ளது.

அணைகளின் கதவுகள்

அணைகளின் கதவுகள்

அணைகளின் கதவுகளை பராமரிக்க பாசன உதவியாளர்கள் என்ற பதவிக்கு ஆட்கள் அமர்த்தப்படுவர். பல்வேறு காரணங்களால் அவர்களுடைய எண்ணிக்கை தற்போது குறைந்துவிட்டது. இயந்திர பொறியாளர்கள் என்ற பணியிடம் இருந்தது. அதுவும் தற்போது குறைந்துவிட்டது. சிறிய பழுது ஏற்பட்டாலும் ஒப்பந்ததாரரை நாட வேண்டிய நிலை உள்ளது. இது மிகப் பெரிய பிராசஸாக உள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்த பொதுப் பணி துறையினர்.

நீர் வளத் துறை அமைச்சர்

நீர் வளத் துறை அமைச்சர்

இந்த மதகு உடைப்பு குறித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, பரம்பிக்குளம் அணையில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. மதகுகளை ஏற்றி இறக்க உதவும் கை சங்கிலி (Self Pilait)எதிர்பாராத விதமாக கழன்று விழுந்த காரணத்தால் மதகுகள் பழுதாகிவிட்டன.

20 ஆயிரம் கனஅடி நீர்

20 ஆயிரம் கனஅடி நீர்

நீர்வழி போக்குகளில் தடை இல்லாத காரணத்தால் அணையில் இருந்த நீர் கட்டுக் கடங்காமல் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற விபரீதம் இதற்கு முன்பு எப்போதும் ஏற்பட்டது இல்லை. காரணம் கை சங்கிலிகள் தான் மதகுகளை ஏற்றி இறக்க உதவுகின்றன. அதிக எடையுள்ள இரும்புகள் விழுந்ததன் விளைவு தான் மதகுகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

14 ஆயிரம் கன அடி

14 ஆயிரம் கன அடி

காலையில் 20 ஆயிரம் கன அடி வெளியேறியது. தற்போது 14,000 கன அடி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் வெளியேறும் காட்சி மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது. அதிகமாக தண்ணீர் வெளியேறி வருவதால் கரையோர உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெளியேறும் நீர் சாலக்குடியில் இருந்து அரபிக் கடலில் கலக்கும். இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளின் மதகுகளும் பழுது பார்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

6 டிஎம்சி

6 டிஎம்சி

பரம்பிக்குளம் அணையிலிருந்து 6 டிஎம்சி தண்ணீர் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் முழுமையாக வடிந்தவுடன் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதிகாரிகளுடன் கலந்து பேசி அணையை பராமரிக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு பாசனத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+