கை கொடுத்த "மாஸ்டர் பிளான்".. அதிமுகவின் கொங்கு பவரை ஆட்டி பார்த்த திமுக.. தட்டி தூக்கியது எப்படி?
கோயம்புத்தூர்: அதிமுகவின் முக்கியமான கொங்கு பெல்ட் மாவட்ட நிர்வாகிகள் சிலர் நேற்று திமுகவில் இணைந்தனர். ஆனால் இந்த இணைப்பு வெறும் தொடக்கம்தான், முக்கிய நிர்வாகிகள் மேலும் திமுக பக்கம் தாவுவார்கள் என்று தகவல்கள் வருகிறது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின் அதிமுக அரசில் நடந்த ஊழல்கள், முறைகேடுகள் குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன. அதிமுகவின் முக்கியமான முன்னாள் அமைச்சர்கள் பலர் இந்த முறைகேட்டு புகார்களில் சிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
ஒரு பக்கம் ஆளும் கட்சி தரப்பில் இருந்து அதிமுகவிற்கு பிரஷர் வந்து கொண்டு இருக்கும் போது, இன்னொரு பக்கம் சசிகலா தரப்பு அதிமுகவிற்கு கடும் பிரஷரை கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அதிமுகவை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று சசிகலா வேகமாக செயல்பட்டு வருகிறார். தினமும் ஒரு ஆடியோ என்று பல்வேறு அதிமுக உறுப்பினர்களிடம் போனில் பேசி, அதை இணையத்திலும் வெளியிட்டு வருகிறார்கள்.

100 ஆடியோ
கிட்டத்தட்ட 100 ஆடியோக்களை இதுவரை வெளியிட்டுவிட்டார். ஆனால் ஆடியோ வெளியிடுகிறாரே தவிர முறையாக அதிரடி ஆக்சன் எதிலும் அவர் இறங்கவில்லை. இன்னொரு பக்கம் அதிமுகவோ சசிகலாவோடு பேசினாலே ஆக்சன் என்று அதிரடியாக முடிவெடுத்துள்ளது. சசிகலாவோடு பேசும் நபர்களை யோசிக்காமல் தொடர்ந்து கட்சியில் இருந்து அதிமுக நீக்கி வருகிறது.

நீக்கம்
வரிசையாக சசிகலாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள் பலர் கட்சியில் நீக்கப்பட்டுள்ளனர். முன்னதாக அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15 பேர் நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், முன்னாள் எம்.பி. சின்னசாமி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும்
பின் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய அ.தி.மு.க. நிர்வாகிகள் மேலும் 5 பேரை கட்சியில் இருந்து நீக்கி, எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சார்ந்த வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், அதிமுக கோபி நகர் செயலாளர் காளியப்பன் ஆகியோர் உட்பட சில கொங்கு மாவட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

எப்படி
இப்படி முக்கியமான அதிமுக நிர்வாகிகள் நீக்கப்பட்ட நிலையில், இவர் அமமுகவில் இணைவார்கள், அல்லது சசிகலாவுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்று கருதப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. மாறாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் திமுகவில் இணைந்துள்ளனர். அதிமுகவில் இருந்து இவர்கள் நீக்கப்பட்ட உடனே உள்ளே புகுந்து திமுக இவர்களை தட்டி தூக்கி உள்ளனர்.

பின்னணி
ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சார்ந்த அதிமுக வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், அதிமுக கோபி நகர் செயலாளர் காளியப்பன் ஆகியோர் நேற்று திமுகவில் இணைந்தனர். இவர்கள் இருவரும் அதிமுகவிற்காக காலங்காலமாக தேர்தல் பணிகளை, களப்பணிகளை கொங்கு பகுதிகளில் செய்து வந்தவர்கள். ஆனால் தற்போது திடீரென திமுக பக்கம் தாவி உள்ளது. சசிகலாவோடு பேசிய நிலையில், அமமுக செல்லாமல் திமுகவை தேர்வு செய்துள்ளனர்.

என்ன நடந்தது
இந்த நிலையில் திமுக தரப்பில் ஈரோடு மாவட்ட தலைகள் சிலர் பேசியதின் பெயரில்தான் இவர்கள் திமுகவில் இணைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அதோடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான சிலர் விட்ட தூது மூலம் இவர்கள் அதிமுகவில் இருந்து அமமுக செல்லாமல் திமுகவிற்கு ரூட்டை மாற்றி இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. சசிகலா தரப்பு இப்போது எதுவும் செய்யாது, திமுக பக்கம் வந்துவிடுங்கள் என்று பேசி, உள்ளே இழுத்ததாக கூறப்படுகிறது.

பவர் ஹவுஸ்
இவர்கள் எல்லோரும் அதிமுகவின் கொங்கு மாவட்ட பவர் ஹவுஸ் போல பார்க்கப்பட்டனர். ஈரோடு,கோபி பகுதியில் காலங்காலமாக அதிமுகவில் பார்த்த முகங்கள் இவர்கள். இவர்கள் மட்டுமின்றி இன்னும் சிலர் வரும் நாட்களில் திமுக பக்கம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. திமுகவில் இவர்கள் இணைந்து இருப்பது கொங்கு மாவட்டத்தில் அந்த கட்சிக்கு பெரிய பலம் சேர்க்கும். உள்ளாட்சி தேர்தலிலும் அக்கட்சி இது பெரிய உதவியாக இருக்கும்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications