டாக்டர் சிவராமன் வீட்டு திருமணத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் செய்த கொய்யா சட்னி! எப்படி செய்யலாம்?

Subscribe to Oneindia Tamil

கோவை: நடிகரும் சமையல் தொழிலில் கொடி கட்டி பறப்பவருமான மாதம்பட்டி ரங்கராஜ், சித்த மருத்துவர் சிவராமன் வீட்டு திருமணத்தில் செய்திருந்த கொய்யா சட்னி பிரபலமடைந்து வருகிறது.

உணவே மருந்து என்பதற்கேற்ப சமையலில் எதை எப்படி செய்ய வேண்டுமோ அதை அப்படி செய்தால் அது நமது உடலுக்கு மருந்து போல் வேலை செய்யும். எனவே விருந்தே சாப்பிட்டாலும் செய்யும் முறையில் செய்தால் அது உடல்நலனிற்கு கேடு விளைவிக்காது என்பதுதான் சிறப்பு.

How to do Madhampatty Rangarajs Guava Chutney?

அந்த வகையில் அண்மைக்காலமாக மாதம்பட்டி ரங்கராஜ் குழுமத்தின் சமையல் பரவலாக பேசப்பட்டு வருகிறது. எந்த பிரபலங்கள், அரசியல்வாதிகளின் வீட்டு திருமணம் என்றாலும் இவரைத்தான் அழைக்கிறார்கள். அந்த வகையில் அவரது சமையலில் பார்த்து பார்த்து அத்தனை அம்சங்களும் இடம்பெறுவதாக ருசித்தவர்கள் சொல்கிறார்கள்.

ஒரு சமையல் ஆர்டர் வந்துவிட்டாலே நிறைய முறை அவரது குழுவினர் வொர்க் அவுட், பல ரெசிபிகளை ஆர்டர் கொடுத்தவருக்கு அனுப்பி, அதில் அவர்கள் சொல்லும் கண்டிஷன்களை பூர்த்தி செய்யும் வகையில் இறுதியாக ஒரு மெனுவை தயாரிக்கிறார்கள். அப்படித்தான் டாக்டர் சிவராமன் வீட்டு இல்லத் திருமணத்தில் நடந்தது.

உணவு, உடல்நலம் குறித்த விழிப்புணர்களை ஏற்படுத்தி வரும் சித்த மருத்துவர் சிவராமன் தனது அறிவுரைகளில் ஒன்றாக கூறுவது, தயவு செய்து திருமண வீடுகளில் மட்டும் சாப்பிடாதீர்கள்" என்பார்கள். ஆனால் அவரது மகள் திருமணத்திற்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் எந்த குறையும் இருக்கக் கூடாது என்று சிவராமன் விரும்பினார்.

திருமண வீடுகளில் சாப்பிடாதீர்கள் என தாமே கூறிவிட்டு தன் வீட்டு திருமணத்தில் யாரும் சாப்பிடாமல் சென்று விடக் கூடாது என்பதற்காக அவர் போட்ட முதல் கண்டிஷன்- வெள்ளையாக எதுவுமே இருக்கக் கூடாது என்பதுதான். அதாவது சர்க்கரை, மைதா, வெள்ளை அரிசி உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தவே கூடாது என்றார்.

இதையடுத்து பல முறை மாதம்பட்டி தரப்பும், சிவராமன் தரப்பும் ஆலோசனைகளை நடத்தி இறுதியாக ஒரு அற்புதமான விருந்து படைக்கப்பட்டது. அதில் எல்லோரும் பெருமிதமாக கூறுவது கொய்யா சட்னிதான். அதெப்படி கொய்யாவில் சட்னி செய்வது என பலரும் ஆச்சரியத்தில் இருந்தனர்.

சட்னி என்றால் தேங்காய் சட்னி, வேர்க்கடலை சட்னி, வெங்காய சட்னி, தக்காளி சட்னி, வெங்காயம்- தக்காளி சேர்த்து ஒரு சட்னி, சுண்டக்காய் சட்னி உள்ளிட்டவைகள்தான். அப்படி இருக்கும் இந்த கொய்யா சட்னி புதுவிதமாக இருப்பதால் இதை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கொய்யா- 2 (செங்காயாக இருத்தல் வேண்டும்)

கடலை பருப்பு- 2 ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 4

சிறிய வெங்காயம் - 10 முதல் 15 வரை

சிறிய அளவில் புளி, மஞ்சள் தூள்

கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு- தாளிக்க

உப்பு, கறிவேப்பிலை- தேவைக்கேற்ப எண்ணெய்

எண்ணெய் தாளிக்க

செய்முறை

கொய்யாவை எடுத்து 10 முதல் 15 துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு போட்டு அது பொன்னிறமானதும் காய்ந்த மிளகாயை போட வேண்டும். அதன் பிறகு சிறிய வெங்காயம் போட்டு அது வதங்கியதும் கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.

பின்னர் வெட்டி வைத்த கொய்யாக்களை போட்டு வதக்கி விட வேண்டும். நீண்ட நேரம் வேக வேண்டும் என்பதில்லை, சற்று வதங்கினால் போதும். பிறகு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கிவிட்டு புளி சேர்த்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை இலைகளை போட்டு தாளித்து சட்னியில் கொட்டிவிடவும். இந்த சட்னி கெட்டியாக இருத்தல் வேண்டும். கொய்யாவில் கொட்டைகள் நிறைய இருக்கும். அது முழுவதும் அரைப்பட்டு விட்டதா என்று பார்த்துக் கொள்ளவும்.

சமையல் என்பது ஒரு பேஸ் இருக்கும். அதை மாற்றி மாற்றி செய்துக் கொள்ளலாம். அந்த வகையில் கொய்யா சட்னிக்கு இதுதான் பேஸ். இப்படித்தான் மாதம்பட்டி ரங்கராஜும் செய்திருப்பார் என சொல்ல முடியாது. அவரவர் ஸ்டைலுக்கு ஏற்ப பொருட்களை மாற்றியோ கூட்டியோ குறைத்தோ செய்திருக்கக் கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+