கமலின் பக்கா பிளான்.. கவலையின்றி களமிறங்கும் வானதி.. தகிக்கும் கோவை தெற்கு.. கடும் போட்டி!
கோயம்புத்தூர்: தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மிகவும் கடுமையான போட்டி நிலவ போகிறது.. இங்கு மும்முனை போட்டி நிலவ போகிறது.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பாக போட்டியிடும் 20 வேட்பாளர்களில் 17 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாஜகவின் முக்கியமான முகங்களுக்கு இந்த முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் 3 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட வேண்டும். விரைவில் இந்த பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை தெற்கு
தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மிகவும் கடுமையான போட்டி நிலவ போகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் இங்கு அதிமுக போட்டியிட்டு வெற்றிபெற்றது. அதிமுக சார்பாக அம்மன் கே. அர்ஜுனன் இங்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

வாய்ப்பு
இந்த நிலையில் இந்த முறை இங்கு அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பாக வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். கோவை தெற்கு வானதி சீனிவாசனுக்கு கிடைக்கும் என்று பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக தேசிய தலைமை அவரின் ஆசையை நிறைவேற்றி உள்ளது.

கமல்ஹாசன்
இங்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக அதன் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இது கமல்ஹாசனுக்கு முதல் சட்டசபை தேர்தல் ஆகும். இங்கு காங்கிரஸ் சார்பாக மயூரா ஜெயக்குமார் போட்டியிட உள்ளார். இதனால் இங்கு கடும் போட்டி நிலவும்.

மயூரா ஜெயக்குமார்
இங்கு காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் மயூரா ஜெயக்குமாரும் மிகவும் வலிமையான வேட்பாளர் ஆவார். வானதி சீனிவாசனும் இங்கு நடக்கும் தேர்தலுக்காக பல நாட்களாக பிரச்சாரம் செய்து தேர்தல் பணிகளை செய்து வந்தார். இதனால் கமல்ஹாசனுக்கு இவரும் டப் பைட் கொடுக்க வாய்ப்புள்ளது.

ஸ்டார்
இந்த தொகுதியில் போட்டியிடும் மூன்று பேரில் இரண்டு பேர் ஸ்டார் வேட்பாளர்கள். கமலின் அரசியல் எதிர்காலம் இந்த தொகுதியை நம்பியே இருக்கிறது. முதல் தேர்தலில் வெற்றிபெற்றாகி வேண்டிய கட்டாயத்தில் இவர் இருக்கிறார். வானதி சீனிவாசனின் அரசியல் எதிர்காலமும் இதே தொகுதியை நம்பி இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications