கோவையில் ஆதித்யநாத்.. சாரை சாரையாக பைக்கில் வந்த இளைஞர்கள்.. பேரணியால் கடும் போக்குவரத்து நெரிசல்!
கோயம்புத்தூர்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகையை அடுத்து கோவை டவுண்ஹால் அருகே பாஜகவினர் பெரிய அளவில் பைக் பேரணியை நடத்தினர். இதனால் கோவையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று பிரதமர் மோடி தாராபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாஜக தமிழக தலைவர் எல். முருகனை அதிகரித்து மோடி பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் இன்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவைக்கு பிரச்சாரம் மேற்கொள்ள வந்தார்.
கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக யோகி ஆதித்யநாத் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரம்
இன்று மதியம் விமானம் மூலம் கோவை வந்தவர் புலியகுளத்திற்கு சென்று கோவிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் அங்கிருந்து காரில் தேர்முட்டி சென்றார். அங்கு பாஜக வேட்பாளர் வானதியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக பாஜகவினர் பைக்கில் கோவை முழுக்க பெரிய அளவில் பேரணி நடத்தினார்கள்.
|
பேரணி
ஆதித்யநாத் வருகையை அடுத்து கோவை டவுண்ஹால் அருகே பாஜகவினர் பெரிய அளவில் பைக் பேரணியை நடத்தினர். பைக்கில் சாரைசாரையாக கூட்டம் கூட்டமாக பலர் வந்தனர். எல்லோரும் காவி கொடி ஏந்தியபடி பிரச்சாரம் செய்து, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினார்கள்.

வடஇந்தியர்கள்
கோவையில் வேலை பார்க்கும் வடஇந்தியர்கள் பலர் இங்கு பிரச்சாரம் மேற்கொண்டனர். கடந்த சில தினங்களாக வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக வடஇந்திய பெண்கள் பிரச்சாரம் செய்தது போல இன்றும் வடஇந்தியர்கள் பலர் யோகி ஆதித்யநாத் வருகையையொட்டி பிரச்சாரம் செய்தனர்.
— The DEPRESSED philosopher (@Lol_Philosopher) March 31, 2021 |
பைக்
பைக்கில் இப்படி பலர் ஒன்றாக வந்ததால் கோவையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேரணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதோடு சில இடங்களில் கடைகளை மூடும்படி இவர்கள் கூறியதாகவும் தகவல்கள் வருகின்றன. இன்னொறு பக்கம் யோகி ஆதித்யநாத் பிரச்சார பகுதியிலும் பலர் காவி கொடியுடன் காணப்பட்டனர்.

கோஷம்
ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹிந்த் கோஷங்களை எழுப்பி வானதிக்காக பிரச்சாரம் மேற்கொண்டனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications