எங்களை விட்டுடுங்க.. நாங்க தனியா போயிடறோம்.. கெஞ்சிய தம்பதி.. மறுத்த குடும்பம்.. தற்கொலை

ஒரே கயிற்றில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஒரே கயிற்றில் கணவனும், மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சி-வீடியோ

    கோவை: "எங்களை விட்டுடுங்க.. நாங்க தனியா போயிடறோம்" என்று இளம்தம்பதி தனிக்குடித்தனத்துக்கு அனுமதி கேட்க.. அதற்கு மறுப்பு சொல்லி உள்ளனர் குடும்பத்தினர். விளைவு.. ஒரே கயிற்றில் கணவனும், மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகேயுள்ள பொண்ணான்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கேசவராஜ். இவர் தனியார் பைப் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஊட்டியை சேர்ந்த கிருத்திகா என்பவருக்கும் போன வருஷம் கல்யாணம் ஆனது.

    husband and wife suicide due to family issue

    இருவரும் கேசவராஜின் தந்தை ஜெய்சங்கர் மற்றும் தாயாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு மேலாகியும் கேசவராஜ், கிருத்திகா தங்கியிருந்த ரூம் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தார் ஜன்னலை உடைத்து பார்த்தனர்.

    அப்போது கேசவராஜ், கிருத்திகா இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த கருமத்தம்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணையை ஆரம்பித்தனர். குடும்ப பிரச்சனையால் தற்கொலை என்று முதல்கட்டமாக கூறப்பட்டது. இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய பிறகுதான் முழு விவரம் தெரியவந்துள்ளது.

    கிருத்திகா கேசவராஜுக்கு மாமன் மகளாம். இருவரும் தனிக்குடித்தனம் செல்ல வீட்டில் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் வீடு கட்ட வாங்கிய கடன் இருப்பதால் அதை அடைக்க வேண்டும் என்றும், அந்த கடன் கடன் முடியும் வரை தனிக்குடித்தனம் போகக்கூடாது, கூட்டுக்குடும்பமாக வாழலாம் என்றும் பெற்றோர்கள் கண்டிப்புடன் சொல்லி உள்ளனர்.

    இதில்தான் இந்த தம்பதி விரக்தி அடைந்துள்ளனர். அதனால் தங்கள் பெட்ரூமில் உள்ள ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தொடர் விசாரணை நடந்து வருகிறது. ஒரே கயிறில் கணவனும், மனைவியும் தற்கொலை செய்த சம்பவத்தின் பதற்றம் இன்னும் அந்த பகுதியில் தணியவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+