கோவையில் டிஜே இசை நிகழ்ச்சிகளுக்கு அதிரடி தடை.. கடிவாளம் போட்ட போலீஸ்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் உள்ள பப்கள் மற்றும் கிளப்புகளில் டிஜே இசை நிகழ்ச்சிகளை நடத்துதற்கு தற்காலிக தடை விதித்து மாநகர போலீசார் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். டிஜே இசை நிகழ்ச்சிக்கு திடீர் தடை ஏன்? அதன் பின்னணி என்ன? என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை, பெங்களூர், மும்பை, கோவா உள்பட நம் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இரவு நேர பார்ட்டிகள் அதிகரித்து வருகின்றன. கிளப்கள், பார்கள், பப்களில் இளைஞர்கள், இளம்பெண்களை கவரும் வகையில் டிஜே நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Coimbatore DJ Parties Bans

இதற்கு கோவையும் விதிவிலக்கல்ல. கோவையில் உள்ள கிளப் மற்றும் பப்களில் இதுபோன்ற டிஜே நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவது சமீபத்தில் அதிகரிக்க தொடங்கி உள்ளன. சமீபத்தில் கோவை பீளமேடு அருகே உள்ள எஃப்எல் 2 லைசென்ஸ் பெற்ற கிளப் ஒன்றில் சமீபத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை தொடர்ந்து அந்த கிளப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த பிரச்சனையை தொடர்ந்து தான் கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் மற்றும் பிற மூத்த காவல் அதிகாரிகள் நகரில் உள்ள பப் மற்றும் கிளப் உரிமையாளர்களை அழைத்து பேசினர். அப்போது பப் மற்றும் கிளப்புகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி எடுத்து கூறினர். அதோடு காவல்துறையின் அறிவுரைகளை கட்டாயமாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினர். அதுமட்டுமின்றி கோவை நகரில் உள்ள பப், கிளப்புகளில் டிஜே இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

கோவை நகரில் உள்ள பார் மற்றும் பப்களில் டிஜே பார்ட்டிகள் (DJ Parties) நடத்தக்கூடாது. இந்த பார்ட்டியை நடத்துவதற்கு தற்காலிகமாக தடை விதிததுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இந்தக் கட்டுப்பாட்டை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பப்கள், கிளப்புகளுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மூத்த காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ''கோவை நகரில் எஃப்எல் 3 உரிமம் பெற்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட பெரும்பாலான ஹோட்டல்கள் காவல்துறையிடம் முன் அனுமதி பெற்ற பின்னரே டிஜே இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இருப்பினும் நகரில் உள்ள எஃப்எல் 3 மற்றும் எஃப்எல் 2 உரிமம் பெற்ற சில பப்கள் மற்றும் கிளப்கள், காவல்துறைக்கு தெரிவிக்காமலேயே டிஜே நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

இது இருதரப்பு மோதலுக்கு வழிவகுத்து சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இதனை தவிர்க்கவே பப்களில் டிஜே இசை நிகழ்ச்சிகளுக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளோம். சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் வன்முறை போன்ற சூழல் ஏற்பட்டது. அப்படி இருந்தும் அதுபற்றி காவல்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. இதுபோன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் வராமல் இருக்க பார் மற்றும் கிளப்களில் டிஜே நிகழ்ச்சிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது'' என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+