உடலெல்லாம் வியர்வை.. அரசுபஸ்சில் துடிதுடித்த பயணி.. யோசிக்காமல் டிரைவர் - கண்டக்டர் செய்த செயல்.. குவியும் பாராட்டு
கோவை: கோவை அன்னூரில் இருந்து காந்திபுரத்துக்கு சென்ற அரசு பஸ்சில் திடீரென்று பயணி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடல் முழுவதும் வியர்வை கொட்டிய நிலையில் அதனை கவனித்த கண்டக்டர், டிரைவர் உடனடியாக பஸ்சை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உரிய நேரத்தில் பயணிக்கு சிகிச்சை கிடைத்ததால் அவர் பூரண குணமடைந்தார். தற்போது அந்த டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சமீப காலமாக அரசு பஸ் டிரைவர் - கண்டக்டர்கள் பயணிகளிடம் வாக்குவாதம் செய்வது, தவறாக பேசுவது, பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தாமல் செல்வது உள்ளிட்ட வீடியோக்கள் இணையதளங்களில் பரவி வருகிறது. இப்படியான செயல்களில் சிலர் மட்டுமே ஈடுபடுகின்றனர்.
ஆனால் பெரும்பாலான அரசு பஸ், கண்டக்டர்கள் அப்படியானவர்கள் இல்லை. மனிதநேயத்துடன் அன்பாகவும், பண்பாகவும் பழகக்கூடியவர்கள் தான். இந்நிலையில் தான் கோவையில் அரசு பஸ்சில் உயிருக்கு போராடிய பயணி ஒருவரின் உயிரை கண்டக்டர் - டிரைவர் சேர்ந்து சாதுர்யமாக செயல்பட்டு காப்பாற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கோவை மண்டலத்தில் அன்னூர் கிளையில் டிரைவராக பணியாற்றி வருபவர் பி சசிகுமார் (வயது 48). அதேபோல் கண்டக்டராக பணியாற்றி வருபவர் ஜி தினேஷ் குமார் (33). இவர்கள் 2 பேரும் கோவை அன்னூர் - காந்திபுரம் ரூட் பஸ்சில் பணியாற்றி வருகின்றனர்.
45 சி வழித்தட பஸ்சில் இருவரும் பணியில் இருந்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் கணேஷ்புரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் ஏறினார். அவர் அம்மன் கோவிலுக்கு டிக்கெட் எடுத்தார். பஸ் கோவில்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று அந்த ஆண் பயணியின் உடலில் இருந்து அதிகமான வியர்வை வெளியேறியது. இதை கண்டக்டர் தினேஷ் குமார் பார்த்தார். உடனடியாக அவரிடம் சென்று நலம் விசாரித்தார். அதற்கு அந்த பயணி தனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறினார். ஆனால் உண்மையில் அந்த ஆண் பயணி ஏதோ உடல்நல பிரச்சனைக்கு உள்ளாகி இருப்பதை தினேஷ் குமார் அறிந்தார். அதோடு பயணி சிரமப்படுவதை உணர்ந்தார்.
இதனால் அவர் உடனடியாக பயணிக்கு தண்ணீர் கொடுத்தார். அதோடு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறினார். ஆனால் ஆண் பயணி மறுத்தார். இருப்பினும் கண்டக்டர் தினேஷ் குமார் விடவில்லை. சம்பவம் குறித்து டிரைவர் சசிகுமாரிடம் கூறினார். பஸ் குறும்பபாளையத்தில் சென்று கொண்டிருந்தது. இதையடுத்து டிரைவர் சசிகுமார் பஸ்சை அங்கிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
இரவு 7.45 மணிக்கு பஸ் மருத்துவமனை வளாகத்தில் நுழைந்தது. இதையடுத்து மருத்துவ குழுவினர் பயணிக்கு சிகிச்சை அளித்தனர். அந்த பயணி உடல்நலம் தேறினார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பற்றி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பிறகு தான் பஸ்சை அங்கிருந்து டிரைவர் சசிகுமார், கண்டக்டர் தினேஷ் குமார் ஆகியோர் எடுத்து சென்றனர். இதுபற்றி போலீஸ் நிலையம் மற்றும் கிளை மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு 25 நிமிடங்கள் தாமதமாக பஸ் சென்றது.
இந்த சமயத்தில் பஸ்சில் 19 பயணிகள் இருந்தனர்கள். அவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்தனர். மருத்துவமனை சென்றால் காலதாமதம் ஆனாலும் கூட அவர்களும் ஆதரவு வழங்கினர். இதனால் தான் டிரைவர் சசிகுமார் மற்றும் கண்டர்டர் தினேஷ் குமார் ஆகியோரால் அந்த பயணிக்கு உதவி செய்ய முடிந்தது. இதையடுத்து அவர்கள் பயணிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
தற்போது டிரைவர் சசிகுமார், கண்டக்டர் தினேஷ் குமார் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இருவருக்கும் பாராட்டு வழங்கப்பட்டது. அதேபோல் நெட்டிசன்களும் இருவரையும் பாராட்டி வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications