எ.வ.வேலு வீட்டில் ரெய்டு சரி.. யாருங்க இந்த கோவை மீனா ஜெயக்குமார்? ஐடி வளையத்தில் சிக்கியது எப்படி?
கோவை: திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளரும், அமைச்சர் எ.வ.வேலுவுக்கு மிகவும் நெருக்கமானவருமான கோவை மீனா ஜெயக்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு மீனா ஜெயக்குமார் உறவினர் எனக் கூறப்படும் நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில், அமைச்சர் எ.வ.வேலு கோவையில் முதலீடுகள் ஏதும் செய்துள்ளாரா என்ற கோணத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். மீனா ஜெயக்குமார் வீடு மட்டும் அல்லாமல் அவரது மகன் வீட்டிலும் ஐடி ரெய்டு நடக்கிறது.

இதேபோல் கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த திமுக முன்னாள் கவுன்சிலர் எம்.எஸ்.சாமி இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.எஸ்.சாமியை பொறுத்த வரை மீனா ஜெயக்குமாரின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர். இதனால் தான் அவரையும் வருமான வரித்துறை அதிகாரிகள் விட்டு வைக்கவில்லை. கோவை மீனா ஜெயக்குமாரை பொறுத்தவரை கட்சியை கடந்து கோவையில் முக்கிய பெண் தொழிலதிபராகவும் திகழ்கிறார்.
லாட்டரி மார்ட்டின் மனைவி லீமா ரோசும், மீனா ஜெயக்குமாரும் மிகவும் நெருங்கிய தோழிகள் ஆவார்கள். கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்ட்டேட் தொழில் செய்து வரும் மீனா ஜெயக்குமாரை அமைச்சர் எ.வ.வேலுவின் பினாமி என திமுகவில் உள்ள சிலரே கூறிய நிலையில் தான் இந்தச் சோதனையானது நடைபெற்று வருகிறது. கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பார்சன் குடியிருப்பு வளாகத்தில் மீனா ஜெயக்குமார் இல்லம் அமைந்துள்ளது.

இதனிடையே மீனா ஜெயக்குமார் வீட்டில் சோதனை நடைபெறுவதால் அவரிடம் வரவு செலவு கணக்கு வைத்துள்ள பலரும் கலக்கம் அடைந்து காணப்படுகின்றனர். கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் சீட் எதிர்பார்த்து கிடைக்காத கோபத்தில் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திக்கை கட்சி மேடையில் வைத்தே திட்டியவர் தான் மீனா ஜெயக்குமார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications