எஸ்டிபிஐ அலுவலகத்தில் ‘இன்கம் டேக்ஸ்’ திடீர் ரெய்டு.. திரண்ட தொண்டர்கள்.. குவிந்த போலீஸ்.. பரபரப்பு!
கோவை : கோவை உக்கடம் பகுதியில் உள்ள எஸ்டிபிஐ அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். வருமான வரித்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள் இரவு நேரத்தில் எஸ்டிபிஐ அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட தகவல் பரவி, அக்கட்சியினர் திரண்டு போராட்டம் நடத்தியதால அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், வருமான வரித்துறை இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நெல்லை முபாரக் விடுத்துள்ள அறிக்கையில், "எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட அலுவலகத்தில், சோதனை என்ற பெயரில் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை தனது கைப்பாவையான மத்திய வருமான வரித்துறையின் மூலமாக ஏவிவிடும் ஒன்றிய பாஜக அரசின் ஏதேச்சதிகாரப் போக்கு கண்டிக்கத்தக்கது.

இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளின் மூலம் ஒருபோதும் ஜனநாயகத்தின் குரலை நசுக்கிவிட முடியாது என்பதை ஒன்றிய அரசு புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற அராஜக அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் குரலெழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications