காலம் கலி காலம் ஆகி போச்சுடா.. பொது இடத்தில் நெருக்கம்.. பதை பதைக்க வைக்கும் மாணவ ஜோடி!

பொது இடங்களில் பள்ளி மாணவர்கள் அநாகரீகமாக நடந்து கொள்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலிகாலம்... முத்தி போச்சு... இளைய சமுதாயம் எதைநோக்கி பயணிக்கிறதே என்றே தெரியவில்லை... அதை நினைச்சாலே அடிவயிற்றில் பயமாகவும் இருக்கிறது!

முன்பெல்லாம் வகுப்பு மாணவனிடம் ஒரு மாணவி பாடத்தில் சந்தேகம் கேட்கவே தயங்குவாள்.. வெட்கப்படுவாள்.. சந்தேகம் கேட்டால்கூட யாராவது எதாவது சொல்லி கேலி கிண்டல் செய்து விடுவார்களோ என்று கூட யோசிக்கும் காலம் இருந்தது.

 இதுவா சமத்துவம்?

இதுவா சமத்துவம்?

ஆனால் சுதந்திரம், சமத்துவம், பாலின வேறுபாடுகள் களையப்பட்டு, நம் பிள்ளைகள் முற்போக்காக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டால், சில சமயங்களில் இது வேற திசையில பயணிக்கவும் ஆரம்பித்துவிடுகிறது.

 பஸ் ஸ்டேண்ட்

பஸ் ஸ்டேண்ட்

தற்போது ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மாணவி, மாணவன் இருவரும் பள்ளி சீருடையில் இருக்கிறார்கள். கையில் புத்தக பை இருக்கிறது... ஆனால் இவர்கள் இருப்பது ஸ்கூலில் இல்லை. ஒரு பஸ் ஸ்டேண்டில்!!

 நெருக்கம்... இணக்கம்

நெருக்கம்... இணக்கம்

ஒருவர் மீது ஒருவர் ஏறி உட்கார்ந்து கொள்ளவில்லை.. அவ்வளவுதான் வித்தியாசம்.. அப்படி ஒரு நெருக்கம்! இணக்கம்!! பரபரப்பு நிறைந்த பஸ் ஸ்டேண்டில், பட்டப்பகலில் ஏராளமானோர் இவர்களை கடந்து செல்கிறார்கள், வருகிறார்கள், ஏன்... இந்த ஜோடிக்கு பக்கத்திலேயே ஒருவர் உட்கார்ந்தும் இருக்கிறார்.

 சீருடை மாணவர்கள்

சீருடை மாணவர்கள்

ஆளுக்கொரு செல்போனை கையில் வைத்து கொண்டு என்னமோ பேசுகிறார்கள், பாலியல் சீண்டலும் நடக்கிறது, ஒரு திருட்டு பார்வை அந்த மாணவன் சுற்றுமுற்றும் பார்க்கிறான்! இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது. இந்த மாணவர்கள் கோவை பள்ளியின் சீருடை அணிந்தவர்கள் என்று மட்டும் தெரிகிறது.

 செல்போன் காரணமா?

செல்போன் காரணமா?

ஸ்கூலுக்கு போய்ட்டு திரும்பி வரும்போதுதான் இந்த அமர்க்களம் செய்கிறார்களா, இல்லை, ஸ்கூலுக்கு போகாமலேயே கட் அடித்துவிட்டு இப்படி பொதுஇடத்தில் உட்கார்ந்து கொண்டு சேட்டை செய்கிறார்களா என்று தெரியவில்லை. இதற்கு யாரை குத்தம் சொல்வது? பெற்றவர்களையா? பள்ளி நிர்வாகத்தையா? அல்லது கெட்டு குட்டிச்சுவராக்கி கொண்டிருக்கும் கையில் உள்ள செல்போனையா? என்னத்த சொல்றது???

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+