கோவையில் மீண்டும் பகீர்.. அரசுக் கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார்.. மாவட்ட ஆட்சியரிடம் மனு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ரகுநாதன் என்பவர் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாக இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

கோவை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிபவர் ரகுநாதன். இவர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாகவும் பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதாகவும் இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்,

Indian Students Union accused Coimbatore Govt Arts College professor of sexual misconduct

மேலும், இது தொடர்பாக ரகுநாதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாணவர் சங்கத்தினர், "பாதிக்கப்பட்ட மாணவிகள் இது குறித்து ஏற்கனவே புகார் அளித்தும் கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்த ஆதாரங்களை மாவட்ட ஆட்சியரிடம் விரைவில் வழங்குவோம்.

Indian Students Union accused Coimbatore Govt Arts College professor of sexual misconduct

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இது போன்றவர்கள் ஆசிரியர் தகுதி அற்றவர்கள்" என்று தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+