கோவையிலிருந்து புறப்பட்ட விமானம்.. நடுவானில் கார்கோவில் வந்த புகை.. சென்னையில் அவசர லேண்டிங்!

இன்று மதியம் கோவையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: இன்று மதியம் கோவையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சமீப காலமாக சென்னை நோக்கி வரும் விமானங்கள் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு பிரச்சனைக்கு உள்ளாகிறது. இதனால் விமானங்கள் அடிக்கடி அவசர கதியில் தரையிறக்கப்படும் சம்பவம் நடக்கிறது. சிறிய தனியார் விமானங்கள் இது போன்ற பிரச்சனைக்கு அதிகம் உள்ளாகிறது.

கோவையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விமானத்தின் உட்பக்கத்தில் திடீர் என்று புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

அலாரம்

அலாரம்

இதனால் விமானத்தில் தீ விபத்தை குறித்தும் எச்சரிக்கை கருவிகள் அலற தொடங்கியது. இதனால் விமானிகள் சுதாரித்து வேகமாக சென்னை நோக்கி சென்றனர். அடுத்த 15 நிமிடத்தில் விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கினார்கள்.

சரக்கு

சரக்கு

புகை வந்ததை அடுத்து அவசரமாக தரையிறக்கபட்டது. விமானத்தில் சரக்கு வைக்கும் அறையில் புகை வந்தது கடைசியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் எச்சரிக்கை மணி அடிக்க காரணம். இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

தீ இல்லை

தீ இல்லை

ஆனால் விமானத்தில் தீ விபத்து ஏற்படவில்லை என்று விமான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதில், எங்கும் தீ விபத்து ஏற்படவில்லை. லேசாக புகை மட்டும் வந்துள்ளது. அதனால் வேகமாக விமானத்தை தரையிறக்கினோம்.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் இந்த புகை எதனால் வந்தது என்று தெரியவில்லை. கார்கோ பகுதியில் சரக்குப் பொருட்கள் இருக்கும் இடத்தில் இருந்து புகை வந்துள்ளது. இது தொடர்பாக விசாரித்து வருகிறோம். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமான அதிகாரிகள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+