கண்ட கண்ட நேரத்தில் கரண்ட் கட்..மின் வாரியத்தால் அப்சட் ஆகும் மக்கள்! கொஞ்சம் பாத்து செய்யுங்க சார்!
கோவை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் தொழில் நகரங்களான கோவை, திருப்பூர் மற்றும் நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் தொழில்துறையினரும் பொதுமக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டு வெப்ப அலை காரணமாக கணிசமாக வெயில் அதிகரித்து இருக்கிறது. அதிகபட்சமாக நேற்று 18 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபேரன் ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது.

பொதுவாகவே வெயில் காலங்களில் மின் நுகர்வு அதிகமாக இருக்கும் ஏர் கண்டிஷனர், ஃபேன், ஏர் கூலர் ,தொலைக்காட்சி ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதால் கோடை காலங்களில் மின்விநியோகம் செய்ய முடியாமல் மின்வாரிய அதிகாரிகளும் திணறுகின்றனர்.
மேலும் அதிக மின் அழுத்தம் காரணமாக மின்சாரத்தை சீராக வழங்கும் பீடர் இயந்திரமும் அடிக்கடி பழுதாவதால் மின்தடை ஏற்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது கோடை காலத்தின் தொடக்கத்தில் இருக்கும் நிலையில் மின் தேவையானது 20 ஆயிரம் மெகா வாட்டாக உயர்ந்திருக்கிறது. அதே நேரத்தில் நீர் மின் நிலையங்களிலும் அனல் மின் நிலையங்களிலும் அவ்வப்போது பழுது ஏற்படுவதால் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சீரான விநியோகம் செய்ய முடியவில்லை என மின்சார துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் கோவை, திருப்பூர், திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்தடை காரணமாக தொழில் துறையினர் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். குறிப்பாக கோவை திருப்பூரில் இரவு நேரங்களிலும், நெல்லை திண்டுக்கல் மதுரையில் பகல் நேரங்களிலும் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது.
இதனால் தொழில் செய்ய முடியவில்லை எனக் கூறுகின்றனர் சிறு குறு தொழில் முனைவோர். அது மட்டுமல்லாமல் கோவை திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. மற்ற மாவட்டங்களை விட இந்த மாவட்டங்களில் மின்சாரத்தின் தேவையானது அதிகம். மேலும் மும்முனை மின்சாரமும் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால். அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறுகின்றனர். நெல்லை சேரன்மாதேவி பகுதியில் நேற்று மற்றும் 18 முறை மின்வெட்டு ஏற்பட்டதாக புகார் கூறப்படுகிறது.
தற்போது கோடை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் மே மாதம் வெயில் உச்சத்தில் இருக்கும். அப்போது மின் தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் உரிய நடவடிக்கை எடுத்து மின்வெட்டு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்களும் தொழில் துறையினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications