எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவனின் சம்பந்தியிடம் ரூ 42 கோடி பறிமுதல்! ரூ 100 கோடி வரி ஏய்ப்பு
கோவை: தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவனின் சம்பந்தி வீடு உள்பட பல இடங்களில் கோவையில் ரெய்டு நடந்தது. அப்போது ரூ 42 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 100 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நிகழ்த்தப்பட்டதும் தெரியவந்தது.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் அமலாக்கத் துறையும், வருமான வரித் துறையும் எப்போது வேண்டுமானாலும் சோதனையை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

அந்த வகையில் குட்கா வழக்கில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி வழங்கினார். மேலும் சில முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் திடீரென முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருக்கமான நண்பர் இளங்கோவனின் வீடு, அலுவலகம், அவருக்குச் சொந்தமான கல்லூரிகளில் 5 நாட்களாக வருமான வரித் துறை ரெய்டு நடத்தப்பட்டது. இந்த நிலையில் இளங்கோவனின் சம்பந்தி பாலசுப்பிரமணியம் கோவையில் அஸ்வின் பேப்பர் மில்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அவருடைய நிறுவனம், கோவையை சேர்ந்த லட்சுமி டூல்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் வரதராஜனுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வரதராஜன் தொடர்புடைய இடங்களான துடியலூர், ராவுத்தர் பிரிவு, செலக்கரிச்சல், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.
பாலசுப்பிரமணியம், வரதராஜன் ஆகிய இருவருக்கு சொந்தமான இடங்களில் 5 நாட்களாக நடந்து வந்த சோதனை முடிவடைந்தது. அப்போது பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. அப்போது சோதனையின் எந்த ஒரு விவரத்தையும் அவர்கள் அறிவிக்காமல் சென்ற நிலையில் இதன் விவரங்களை நேற்று முன் தினம்தான் வெளியிட்டனர்.
அந்த வகையில் கோவையில் நடந்த ரெய்டில் ரூ 42 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. அது போல் ரூ 100 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனைகள் இத்துடன் முடிந்து விடாது என்றும் இன்னும் நீள வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications