”தலைவா படம் பிரச்சனையின் போது.. ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றாரே விஜய்..” சரத்குமார் ஆவேசம்!
கோவை: சென்சார் போர்டு ஜனநாயகன் படத்திற்கு முன்பாக பல்வேறு படங்களை நிறுத்தி இருக்கிறார்கள் என்று நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் தெரிவித்துள்ளார். விஜய்யின் தலைவா படத்திற்கு ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே இப்படி நடந்தது என்று கூறிய சரத்குமார், அப்போது மட்டும் விஜய் கைகட்டி நின்றார் தானே என்றும் விமர்சித்துள்ளார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி (இன்று) ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் டிசம்பர் 18ஆம் தேதி தட்கல் முறையில் தணிக்கை சான்றிதழ் பெற முறையிடப்பட்டும், தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் சென்சார் சான்றிதழ் கோரி ஜனநாயகன் படக்குழு நீதிமன்றத்தை நாடியது. இதன்பின் ஜனநாயகன் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்க உத்தரவிட்டு, தனி நீதிபதி பிடி ஆஷா தீர்ப்பளித்தார். இதனால் ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிக்கைக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, மத்திய அரசு வழக்கறிஞர் உடனடியாக மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதனால் ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்பட வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் காங்கிரஸ் மற்றும் தவெக கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜனநாயகன் படத்தை வேண்டுமென்றே தணிக்கை வாரியம் தடுப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல் பாஜக மீதும் கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் பேசுகையில், சென்சார் போர்டு ஒரு படத்தை மட்டும் நிறுத்தவில்லை. இதற்கு முன்பே பல்வேறு படங்களை நிறுத்தி உள்ளார்கள். தக் லைஃப் படத்திற்கும் இது நடந்தது. விஜய்யின் தலைவா படத்திற்கு ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இதுபோன்று நடந்ததே.. அப்போது விஜய் கைகட்டி நின்றார் தானே..
இதில் எந்த அரசியலும் இல்லை. அனைத்தும் அரசியல் ரீதியாகவே தான் நடைபெறுகிறது என்ற எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அரசியல் தலைவராக இருப்பதால் விஜய்க்கு நெருப்படி என்று அப்படி எதுவும் இல்லை. ஜனநாயகன் ரிலீஸாகணும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கிறது. நான் நடித்த அடங்காதே திரைப்படம் கூட இன்னும் வரலை.. அதற்கு யாரும் குரல் கொடுக்கவில்லையே என்று தெரிவித்தார்.
-
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!











Click it and Unblock the Notifications