“இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை”.. கோவைக்கு திமுகவின் ஸ்பெஷல் வாக்குறுதி பற்றி அண்ணாமலை கிண்டல்!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் சர்வதேச தரத்திலான ஸ்டேடியம் அமைக்கப்போவதாக திமுக கூறுவது, இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாகக் கருதப்பட வேண்டிய ஒன்று என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பாக தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Joke of the year Annamalai criticizes dmk Cricket stadium in coimbatore promise

திமுகவின் தேர்தல் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் ஏராளமான வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் கோவையில் உலக் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் புதிதாக ஒரு வாக்குறுதியை அறிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் இந்த வாக்குறுதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கையை மனதில் வைத்து, கோவையில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சி எடுப்போம். தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், சென்னையின் சின்னமான சேப்பாக்கம் மைதானத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வதேச தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானமாக கோவை கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கும் என்ற வாக்குறுதியை அளிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

கோவையில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சி எடுப்போம் என திமுக வாக்குறுதி அளித்துள்ள நிலையில், கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, திமுகவின் இந்த வாக்குறுதியை இந்த ஆண்டின் சிறந்த ஜோக் என விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். 2021-ம் ஆண்டில் அவர் அளித்த 511 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. தோல்வியை உணர்ந்த பிறகு மேலும் வாக்குறுதிகளை வழங்குவதற்கு முன்பு ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகளை எண்ணிப் பார்க்க வேண்டும். திமுகவின் தேர்தல் வித்தைகளால் கோவையில் உள்ள இளைஞர்களையும், விளையாட்டு ஆர்வலர்களையும் ஏமாற்ற முடியாது.

கோவையில் கடந்த 3 ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையம் அமைக்க முடியாத கட்சி திமுக. கோவையில் சர்வதேச தரத்திலான ஸ்டேடியம் அமைக்கப்போவதாக கூறுவது, கோவை மக்களின் கைத்தட்டல்களைப் பெறுவதற்காக சொல்லப்பட்டுள்ள இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாகக் கருதப்பட வேண்டிய ஒன்று" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+