கோவை ம.நீ.ம.வில் வெற்றிடம்..? மகேந்திரனுக்கு மாற்று அனுஷா ரவி... கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவு..!
கோவை: மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் அண்மையில் திமுகவில் இணைந்ததை அடுத்து, கோவையில் அவருக்கு மாற்றாக பெண் தொழிலதிபர் அனுஷா ரவியை களமிறக்க திட்டமிட்டுள்ளார் கமல்.
திருப்பூர், கோவை, மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் நடத்தி வரும் அனுஷா ரவி, மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.
திமுகவில் இணையுமாறு அண்மையில் மகேந்திரன் தரப்பிடமிருந்து சென்ற அழைப்பை அனுஷா ரவி நிராகரித்த தகவலை அறிந்த கமல், இது குறித்து தன்னுடன் இருந்தவர்களிடம் பெருமிதப்பட்டுள்ளார்.

கோவை மநீம
மக்கள் நீதி மய்யத்தின் கோவை மாவட்ட முகமாகவும், அக்கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்தவர் மகேந்திரன். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் ம.நீ.ம. சார்பில் போட்டியிட்ட அவர், திமுக வேட்பாளர் கார்த்திக்கின் வெற்றியை பதம் பார்த்தார். இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு பிறக்கு கமலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மநீம வில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

அழைப்பு
அவ்வாறு அவர் திமுகவில் இணைந்தபோது மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகளை தன்னுடன் அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டார். அதன்படி பத்மபிரியா உள்ளிட்ட இன்னும் பல முக்கிய நிர்வாகிகள் திமுகவுக்கு சென்றனர். இதனிடையே ம.நீ.ம.வின் கொள்கை பரப்பு நிர்வாகியும், தொழிதிபருமான அனுஷா ரவியையும் திமுகவுக்கு அழைத்துச் செல்ல மகேந்திரன் தரப்பு முயற்சிகள் மேற்கொண்டது.

ஆலோசனை
இதற்கான தூதும் அனுஷா ரவிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவரோ இருப்பதே போதும் என்ற மனநிலையில் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்திலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். கடந்தவாரம் இந்த தகவல் கமலுக்கு கிடைத்ததை அடுத்து, அவரை சென்னைக்கு நேரில் அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். . மேலும், மகேந்திரனுக்கு மாற்றாக கோவையில் அனுஷா ரவியை களமிறக்கவும் கமல் அதிரடி முடிவெடுத்திருக்கிறார்.

கட்சிப்பணி
இதனிடையே கட்சி நிகழ்ச்சிகளில் அனுஷா ரவியும் இப்போது ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார். கடந்த சனிக்கிழமையன்று பெட்ரோல், டீசல் விலை மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து கோவையில் ம.நீ.ம. நடத்திய போராட்டத்தை அனுஷா ரவி தான் முன்னின்று நடத்தியிருக்கிறார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications