Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காமாட்சிபுரத்தில் "இடி".. கருணாநிதி நிறைய ஓட்டு சேர்த்தார்..ஆனா இந்த உதயநிதி? சொல்றது யார்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

கோவை: கருணாநிதி நிறைய ஓட்டுகளை சேகரித்து வைத்தார். அவரது மகன் ஸ்டாலின் அதை பாதுகாத்து வருகிறார்.. ஆனால், உதயநிதியோ, அதையெல்லாம் கெடுத்து வருகிறார் என்று காமாட்சிபுரி ஆதினம் விமர்சித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பாஜக கொந்தளித்து வருகிறது.. அமித்ஷா முதல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரை கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Kamatchipuri Adheenam praises Karunanidhi, CM MK Stalin and has slams Udhayanidhi Stalin

இதனிடையே, உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாமியார் உதயநிதியின் படத்தை, கத்தியால் கிழித்து தீயிட்டு கொளுத்தியதுடன், உதயநிதியின் தலையை கொண்டு வந்தால், ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தார்..

தலைக்கு 10 கோடி: "என் தலையை சீவுவதற்கு, ஒரு கோடி ரூபாய் எதுக்கு? வெறும் 10 ரூபாய் சீப்பு போதுமே"என்று உதயநிதி அதற்கு பதிலடி சொல்லவும், எரிச்சலடைந்த சாமியார் தரப்பு, சன்மான தொகையாக 10 கோடி ரூபாய் என்று அதிரடியாக உயர்த்திவிட்டது.
இதனால், உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டினால் ரூ.10 கோடி பரிசு வழங்குவேன் என்று அறிவித்த அயோத்தி சாமியாரின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.. ஒரு தரப்பினர், அந்த சாமியார் மீது புகார் தந்தும் வருகிறார்கள்.

போலீசில் புகார்: இந்நிலையில், தான் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.. "போலீசில் உங்கள் மீது புகார் தந்திருக்கிறார்களே" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, முன்பைவிட இப்போது, தன்னுடைய கருத்தில் இன்னும் உறுதியாக இருப்பதாகவும் உதயநிதி சொல்லி உள்ளார்.

கண்டனம்: ஆனால், உதயநிதி மீதான எதிர்ப்புகள் வலுவாகி வருகிறது.. காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரரும் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சொன்னதாவது :

Kamatchipuri Adheenam praises Karunanidhi, CM MK Stalin and has slams Udhayanidhi Stalin

"கொசுவை ஒழிப்பது போல் இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி சொல்கிறார்.. கருணாநிதி நல்ல முறையில்தான் ஆட்சி செய்தார். ஆனால், அவரது மகன் ஸ்டாலின் அதை பின்பற்றி ஆட்சி செய்து வருகிறார்.. அந்த வழியில், அடுத்து ஆட்சிசெய்வதற்கான தகுதிகளை உதயநிதி வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், அதைவிட்டுவிட்டு, இந்து தர்மத்தையே அழித்து விட வேண்டும் என, வாய் கூசாமல் மேடையில் பேசி வருகிறார்.

கருணாநிதி ஓட்டு: குறைந்த வயதில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்... அதை சிறப்பாக செய்யாமல், இந்து தர்மத்தை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படக்கூடாது.

இந்து தர்மத்தை கொச்சைப்படுத்துபவர்களை தேர்தலில் நாம் தேர்வு செய்யவும் கூடாது.. கருணாநிதி நிறைய ஓட்டுகளை சேகரித்து வைத்தார். அவரது மகன் ஸ்டாலின் அதை பாதுகாத்து வருகிறார்.. ஆனால், உதயநிதி அதை கெடுத்து வருகிறார்.. உதயநிதியின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்" என்று கருத்து கூறியுள்ளார் காமாட்சிபுரி ஆதினம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+