"கலங்காதே ஷர்மிளா.. நான் இருக்கேன்.." டிஸ்மிஸ்சான கோவை பெண் டிரைவருக்கு வேறு வேலை.. கனிமொழி உறுதி
கோவை: கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு, வேறு வேலை மற்றும் தேவையான உதவிகளை அளிப்பதாக கனிமொழி எம்.பி. உறுதியளித்துள்ளார்.
கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநரான 23 வயது ஷர்மிளா பயணிகள் பேருந்தை திறம்பட ஒட்டி வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் நேற்றிரவு கோவை சென்ற கனிமொழி, இன்று காலை கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து லஷ்மி மில் சிக்னல் வரை ஷர்மிளா இயக்கிய டவுன் பஸ்ஸில் பயணித்தார்.

அப்போது கனிமொழியிடம் பெண் கண்டக்டர் டிக்கெட் கேட்டதாகவும் அதற்கு எனது கெஸ்டிடம் எப்படி டிக்கெட் கேட்கலாம் என ஓட்டுநர் ஷர்மிளா அவர் மீது கோபப்பட்டு பேருந்து உரிமையாளரிடம் புகார் சொல்ல சென்றதாகவும் தெரிகிறது. இதனிடையே கனிமொழி உதவியாளர் ரூ.120 கொடுத்து 6 டிக்கெட் எடுத்துவிட்டார். பிரச்சனை அதுவல்ல. தனது விருந்தாளியிடம் டிக்கெட் கேட்டது ஏன் என்பது தான் ஷர்மிளாவின் ஆதங்கம்.
இதனிடையே பேருந்து அலுவலகத்தில் நடந்த வாக்குவாதத்தில் ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனையறிந்த கனிமொழி உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி நடந்த விவரத்தை கேட்டறிந்தார். மேலும்,
வேறு வேலை மற்றும் தேவையான உதவிகளை அளிப்பதாகவும் கனிமொழி எம்.பி. உறுதியளித்தார்.
டாக்டர், என்ஜினியர் பணி மட்டுமல்ல அனைத்து பணிகளையும் பெண்களால் செய்ய முடியும் என்பதற்கு உதாரணம் தான் பெண் ஓட்டுநர் ஷர்மிளா என கனிமொழி எம்பி காலையில் தான் பாராட்டியிருந்தார். அவர் பாராட்டி 2 மணி நேரத்திற்குள் ஷர்மிளாவின் வேலை பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications