கோவையில் கனிமொழி! ஜாலியா டவுன் பஸ் பயணம்! ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வாட்ச் பரிசு! கேசுவல் மீட் அப்!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை சென்றுள்ள திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, பெண் ஓட்டுநரான ஷர்மிளா இயக்கிய டவுன் பஸ்ஸில் பயணம் செய்து அவருடன் கலந்துரையாடினார்.

டாக்டர், என்ஜினியர் பணி மட்டுமல்ல அனைத்து பணிகளையும் பெண்களால் செய்ய முடியும் என்பதற்கு உதாரணம் தான் பெண் ஓட்டுநர் ஷர்மிளா என கனிமொழி எம்பி பாராட்டினார்.மேலும் அவருக்கு கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.

Kanimozhi MP traveled in a town bus driven by female driver Sharmila and discussed with him

கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநரான 23 வயது ஷர்மிளா பயணிகள் பேருந்தை திறம்பட ஒட்டி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவரை பற்றியச் செய்திகள் இனையதளங்களில் வைரலாகி வந்த நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, ஷர்மிளாவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியிருக்கிறார்.

அப்போது கோவை வரும் போது கண்டிப்பாக தாம் ஓட்டும் பேருந்தில் பயணம் செய்ய வர வேண்டும் என கனிமொழிக்கு ஷர்மிளா அழைப்பு விடுத்திருக்கிறார். இந்நிலையில் நேற்றிரவு கோவை சென்ற கனிமொழி, ஷர்மிளா விடுத்திருந்த அழைப்பையேற்று இன்று காலை கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் சென்றார். அப்போது பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Kanimozhi MP traveled in a town bus driven by female driver Sharmila and discussed with him

இருப்பினும் பேருந்தின் பெண்கள் பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்த கனிமொழி காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து லட்சுமி மில் சந்திப்பு வரை பயணம் செய்தார். அந்த நிகழ்வை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முதற்கட்ட பணிகள் இன்று தொடங்கியுள்ளதாகவும் இது நிச்சியம் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+