கனிமொழி சந்தோஷ் ஹேப்பி.. கோவையில் ரூ.400 கோடியில் டிஜிட்டல் நிதி மையம்! இளைஞர்களுக்கு செம சான்ஸ்
கோயம்புத்தூர்: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கோயம்புத்தூரில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கோவையில் தொழிற்துறையை அதிரவைக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்கு கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது உற்சாகமான வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் பொருளாதாரப் புரட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் விதமாக, கோவை மண்ணில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமான "கோயம்புத்தூர் டிஜிட்டல் நிதி மையம்" (Digital Finance Hub) அமைக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு கோயம்புத்தூர் பகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், கோடிக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் மட்டற்ற மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தொழில், தொழில்முனைவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் ஏற்கனவே முன்னணி நகரமாகத் திகழும் கோயம்புத்தூர், இந்த சூப்பரான அறிவிப்பின் மூலம் இந்தியாவின் முக்கிய டிஜிட்டல் நிதி மையங்களில் ஒன்றாகவும், சர்வதேச அளவில் கவனம் பெறும் டெக்னாலஜி நகரமாகவும் மேலும் உயர்வடையும் என்று பரவலாகப் பேசப்படுகிறது.
கோவை மக்களின் நீண்டகால வளர்ச்சி
கோவை மக்களின் நீண்டகால வளர்ச்சி மற்றும் எதிர்கால தலைமுறையினரின் பொருளாதார வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்தச் சிறப்புமிக்க திட்டத்திற்கு கோயப்பட்டணத்தில் மிகுந்த வரவேற்பு எழுந்துள்ளது.
அந்தவகையில், கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், உடனடியாக தனது நெஞ்சார்ந்த மகிழ்ச்சியையும் மனமார்ந்த வரவேற்பையும் வெளிப்படுத்தியுள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "கோயம்புத்தூரின் தொழில் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
வேலை வாய்ப்புகள் கிடைக்க போகுது
உலகத் தரத்திலான அலுவலகங்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கான வசதிகள், நவீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வக வசதிகள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த டிஜிட்டல் நிதி மையம் உருவாக்கப்பட உள்ளது..
இந்த திட்டம் உலகளாவிய முதலீடுகளை கோவைக்கு ஈர்ப்பதற்கும், நிதிநுட்ப துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.
தொழில், தொழில்முனைவு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் ஏற்கனவே முன்னணி நகரமாக திகழும் கோயம்புத்தூர், இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் முக்கிய டிஜிட்டல் நிதி மையங்களில் ஒன்றாகவும், சர்வதேச அளவில் கவனம் பெறும் தொழில்நுட்ப நகரமாகவும் மேலும் உயர்வடையும்.
பொருளாதார வாய்ப்புகள்
கோவை மக்களின் நீண்டகால வளர்ச்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கான பொருளாதார வாய்ப்புகளை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்புமிக்க திட்டத்தை கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் சார்பிலும், கோவை மக்களின...
சார்பிலும் மனதார வரவேற்கிறேன்..
கோயம்புத்தூரின் தொழில் வளர்ச்சிக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வரும் தமிழ்நாடு அரசுக்கும், இந்த முக்கியமான திட்டத்தை அறிவித்துள்ள முதல்-அமைச்சருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
