காரமடை ரங்கநாதர் கோயில் தேர்த்திருவிழா.. இந்த ரூட்டுல போகாதீங்க.. கோவை மாவட்ட காவல் துறை அறிவிப்பு
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த காரமடை ரங்கநாதர் திருக்கோவில் தேர்த் திருவி இன்று மாலை நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், கோவை மாவட்ட காவல் துறை சார்பில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது [Karamadai ranganathar temple].
கோவை மாவட்டம், காரமடையில் உள்ள ரங்கநாதர் திருக்கோவிலில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டில் இன்று (மார்ச் 2) நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து மாற்றங்கள்:
1) மேட்டுப்பாளையம் → கோவை நோக்கி செல்லும் இலகு வாகனங்கள்:
மேட்டுப்பாளையம் - காந்திநகர் ஜங்ஷன் - சின்னத் தொட்டிபாளையம் -பெள்ளாதி - - கண்ணார்பாளையம் 4 ரோடு ஜங்ஷன் - கோட்டை பிரிவு ஜங்ஷன் -வழியாக கோவை செல்ல வேண்டும்.
2) மேட்டுப்பாளையம் → கோவை செல்லும் கனரக வாகனங்கள்:
மேட்டுப்பாளையம் - தென்திருப்பதி நால்ரோடு -> அன்னூர் -> கோவில்பாளையம் -வழியாக கோவை செல்ல வேண்டும்.
3) கோவை → மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள்:
பெரியநாயக்கன்பாளையம் - பெட்டதாபுரம் - திம்மம்பாளையம் - மங்களக்கரை புதூர் -டீச்சர்ஸ் காலனி பாலம் வழியாக மேட்டுப்பாளையம் செல்ல வேண்டும்.
வாகன நிறுத்தம்:
திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்களது வாகனங்களை காவல்துறை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். அனுமதியில்லாமல் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
திருவிழாவை முன்னிட்டு போதிய அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ரோந்து பணிகள் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி, அறிவுறுத்தப்பட்ட வழித்தடங்களைப் பின்பற்றி பயணிக்குமாறு கோவை மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications