எஸ்.பி.வேலுமணியை தோற்கடிக்க மக்கள் வெயிட்டிங்.. சொல்கிறார் கார்த்திகேய சிவசேனாதிபதி!
கோவை: தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் பமபரமாக சுழன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Recommended Video
உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி போட்டியிடும் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளராக களமிறங்கியுள்ள கார்த்திகேய சிவசேனாதிபதியை பரபரப்பான பிரசாரத்தின் நடுவில் சந்தித்தோம். அவரிடம் சுடச்சுட கேள்வியை முன்வைப்போம் வாங்க.

தொண்டாமுத்தூர் மக்கள் என்ன சொல்கிறார்கள்? உங்கள் பிரசார பயணம் எப்படி சென்று கொண்டிருக்கிறது?
தொண்டாமுத்தூர் மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான மக்களின் கோபம் தெளிவாக தெரிகிறது. எஸ்.பி. வேலுமணி செய்த ஊழல் தெரிந்து அவர்கள் கொதித்து போய் உள்ளனர். அவரை தோற்கடிக்க தயாராக உள்ளனர்.
ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கோவைக்கு கொடுத்து இருப்பதாக எஸ்.பி. வேலுமணி கூறியிருக்கிறாரே?
உண்மைதான். 50 ஆண்டுகள் இல்லை. 500 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை எஸ்.பி. வேலுமணி என்னும் தனி மனிதர் அடைந்துள்ளார். கூடவே இருக்கும் 3 ரவுடிகளும் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளனர். ஆனால் நீங்கள் சொல்கிற மாதிரி மக்களும், தொகுதியும் கொஞ்சம் கூட வளர்ச்சி அடையவில்லை.
பிரசார பயணத்தில் மறக்க முடியாத நிகழ்வு என்ன?
ஒரு வயதான பாட்டி என்னை கட்டிப்பிடித்து ''தம்பி கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும்'' என்று கூறியதும் குழந்தைகளும், பெண்களும் தொடர்ந்து ஆதரவு கொடுத்தது மறக்க முடியாத தருணங்கள்.
எஸ்.பி. வேலுமணி எனக்கு நிகரான போட்டியாளர் இல்லை என்கிறீர்கள்? அந்தளவுக்கு உங்கள் மீது அதீத நம்பிக்கையா?
அப்படி எல்லாம் இல்லை. பணத்துடன் அவருடன் போட்டி போட முடியாது. அந்தளவுக்கு அவர் பணம் வைத்திருக்கிறார். ஆனால் எம்.எல்.ஏ . வாக, மக்கள் மீதான அக்கறையில் அவர் தோல்வி அடைந்து விட்டார். மக்களிடம் அவருக்கு எதிர்ப்பு அலை காணப்படுகிறது. என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த வருமாறு அவருக்கு பலமுறை சவால் விட்டுள்ளேன். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
உங்கள் தொகுதியின் தேவைகள் என்னென்ன?
வார்டு ரீதியாக தனித்தனியாக திட்டங்கள் வைத்துள்ளேன். குறிப்பாக தண்ணீர் பிரச்சினை. யானைகள்-மக்கள் மோதல், வயலை நாசப்படுத்தும் பன்றிகள் பிரச்சினை ஆகியவற்றில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொண்டாமுத்தூர் மக்களுக்கு நீங்கள் அளிக்கும் வாக்குறுதி என்ன?
தொகுதி முழுவதும் உள்கட்டமைப்பை ஏற்படுத்துவோம். கோவை குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் புனரமைக்கப்படும். மேம்பாலங்கள் மேம்படுத்தப்படும். விமான நிலைய விரிவாக்கத்துக்கு ஓத்துழைப்பு கொடுக்கப்படும். சமூக நீதிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.
-
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications