பராசக்தி.. சினிமாவை வைத்து தமிழக அரசியலை நிர்ணயம் செய்யலாம் நினைத்தால்.. கார்த்தி சிதம்பரம் பேட்டி
கோவை : பராசக்தி திரைப்படத்தை நான் பார்க்கவில்லை.. இரண்டு படத்தையும் நான் பார்க்கப் போவதாக இல்லை.. திரைப்படத்தை வைத்து தமிழ்நாட்டு அரசியலை யாராவது நிர்ணயம் செய்யலாம் என்று நினைத்தார்கள் என்றால் அது தவறு. ஒரு காலத்தில் அர்னால்டு படம் தமிழகத்தில் அதிக அளவில் ஓடியது.. அவர் முதலமைச்சராக ஆகியிருப்பாரா? என்று கோவையில் கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான கார்த்திக் சிதம்பரம் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தேவையில்லாத ஒன்று ஜனநாயகத்திற்கு எதிரானது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேவையில்லாத ஒன்று. பார்லிமென்ட் பொறுத்த வரைக்கும் ஜனநாயகத்தில் மெஜாரிட்டி இருக்கக்கூடிய ஆட்சி இருக்கும் வரை அரசாங்கம் நடைபெறும். ஆனால் மெஜாரிட்டி இல்லை என்றால் வேறு யாராவது மெஜாரிட்டியை உருவாக்க வேண்டும். இல்லை என்றால் தேர்தலை சந்திக்க வேண்டும்.
குறிப்பாக ஜனாதிபதி முறையில் இருக்கும் ஆட்சியில் தான் பிக்சட் டைம் என்று சொல்லக்கூடிய நிரந்தர அரசாங்கமாக இருக்க முடியும். என்னை பொறுத்த வரைக்கும் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நம்முடைய அரசியல் சாசனத்திற்கு எதிரானது . அதிலும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்தால் செலவு கம்மியாகும் என்று சொல்லுகிறார்கள். தேர்தலுக்கு அவ்வளவு பெரிய தொகை ஒன்றும் இந்தியாவில் செலவு ஆவது கிடையாது. அதேபோல இந்தியாவில் ஒரு ஆண்டிற்கு ஐந்து அல்லது ஆறு தேர்தல்கள் நடப்பது நல்லது.
ஏனென்றால் 30 மாநிலங்கள் இருக்கின்றது சராசரியாக ஒரு ஆண்டிற்கு மூன்று முதல் ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் வரும். அதில் தவறே கிடையாது. அடிக்கடி தேர்தல் வருவதால் தான் மக்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். அரசியல் கட்சிகளும் கொஞ்சம் விழிப்போடு இருப்பார்கள். ஆனால் ஐந்தாண்டுக்கு ஒரு முறை தான் தேர்தல் வருகிறது என்றால் அரசியல் கட்சிகளும் விழிப்போடு இருக்க மாட்டார்கள். மெத்தன போக்கோடு தான் இருப்பார்கள்.
இதில் முக்கியமான விஷயம் மாநில தேர்தல் மூலமாக கூட மக்கள் சில சமயங்களில் மத்திய அரசாங்கத்திற்கு பாடம் புகட்டுவார்கள். அப்படி அடிக்கடி தேர்தல் வருவதால் தான் மக்கள் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்த முடிகிறது என்றார்.
பராசக்தி திரைப்பட விவகாரம் குறித்த கேள்விக்கு, "பராசக்தி திரைப்படத்தை நான் பார்க்கவில்லை.. இரண்டு படத்தையும் நான் பார்க்கப் போவதாக இல்லை.. திரைப்படத்தை வைத்து தமிழ்நாட்டு அரசியலை யாராவது நிர்ணயம் செய்யலாம் என்று நினைத்தார்கள் என்றால் அது தவறு. ஒரு காலத்தில் அர்னால்டு படம் தமிழகத்தில் அதிக அளவில் ஓடியது.. அவர் முதலமைச்சராக ஆகியிருப்பாரா? திரைப்படத்தை வைத்து தமிழ்நாடு அரசியலோ, தமிழ்நாடு வரலாற்றை மக்கள் மனநலமையோ யாராவது வெளிப்படுத்தலாம் என்று நினைத்தால், அரசியல் புரிதல் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்று தான் அர்த்தம்.
என்னை பொறுத்த வரைக்கும் இரண்டு படங்களுமே ஒரு கமர்சியல் ஆர்கனைசேஷன் அவர்களுக்கு லாபமோ நஷ்டமோ வருவதை பற்றி எனக்கு கவலை கிடையாது.. இது எதையும் செட் செய்து காட்டப் போவதில்லை.. ஆகவே அந்த இரண்டு படங்களையும் நான் பார்க்கப் போவதுமில்லை
இது என்ன ஹிஸ்டாரிக்கல் டாக்குமெண்ட் படமா.. இந்த படத்தில் வருவது ஹிஸ்டாரிக்கல் டாக்குமெண்ட்டா ஆராய்ச்சியாளர்கள் செய்தார்களா? சரித்திர சாதனையாளர்கள் விளக்கி இருக்கிறார்களா.. தயவுசெய்து அரசியலில் திணிக்காதீர்கள்.. ஒரு மூன்று மணி நேரமும், எவ்வளவோ நேரம் என்று கூட அந்த படம் ஓடும் என எனக்கு தெரியாது. அவர்கள் படமாக செட் செய்கிறார்கள். தமிழ்நாடு அரசியலில் இது என்ன செய்யப் போகிறது இதுதான் மக்கள் மனநிலையை வெளிப்படுத்துகிறது என யாராவது நினைத்தார்கள் என்றால், அரசியல் புரியாதவர்கள் தான் அப்படி பேசுவார்கள்
அவர்கள் டெல்லி சென்று பொங்கல் விழா கொண்டாடட்டும் ஆஸ்கார் விழாவிற்கு கூட இவர்களை ரெக்கமண்ட் செய்யட்டும் அதைப் பற்றி எனக்கு கவலை கிடையாது இது ஒரு தேவையில்லாத பிரச்சினை அந்த படத்தின் கதையோ அதில் இருக்கக்கூடிய கற்பனையோ என்னை பொறுத்த வரைக்கும் தமிழ்நாட்டில் ஒரு தேவையில்லாத பிரச்சினை தான் இன்றைக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது தெரு நாய் பிரச்சனை சாலை பிரச்சனை குப்பை பிரச்சனை என பல பிரச்சனைகள் இருக்கிறது
எந்தப் படத்தையும் தடை செய்ய வேண்டாம் மக்களுக்கு நன்றாக தெரியும் எது உண்மை என்பது எது பொய் என்பது இதை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயமே கிடையாது. படம் பார்க்கிறவர்கள் பார்ப்பார்கள்.. ஒரு என்டர்டைன்மென்ட் ஒரு பொழுதுபோக்கு அவ்வளவுதான்.. அதற்கு மேல் எந்த ஒரு சீரியஸும் இந்த ரெண்டு படத்திற்கும் கொடுக்கத் தேவையில்லை.. நான் இரண்டு படங்களையும் பார்ப்பதாக இல்லை
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்து சம்பந்தமான கேள்விக்கு பதில் கார்த்தி சிதம்பரம், "ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது சமீப காலமாக வந்தது கிடையாது அனைத்து அரசியல் கட்சிகளில் இருக்கும் எதார்த்த எதிர்பார்ப்பு இது ஒரு புதிய சிந்தனை கிடையாது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருக்கக்கூடிய ஒன்றுதான்.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதை இந்த ஆட்சியில் நாங்கள் கேட்கவில்லை அவர்களுக்கு மெஜாரிட்டி இருக்கிறது வருகின்ற தேர்தலில் வரக்கூடிய எதிர்பார்ப்பு தான் எல்லா அரசியல் கட்சிகளும் தான் சொல்கிறார்கள்.
1967 லிருந்து நேரடி ஆட்சியில் நாங்கள் இல்லை பல எதிர்பார்ப்புகள் இருக்கிறது சில சமயம் வாய்ப்புகள் வந்தது அதை நழுவ விட்டு விட்டோம். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது ஒரு தனிப்பட்ட கருத்து கிடையாது கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் மக்களை சந்திக்க வேண்டும் எங்களுக்கு கணிசமான உறுப்பினர்களை சட்டமன்ற உறுப்பினராக ஆக்க வேண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் அதன் பிறகு மற்றதை பார்த்துக் கொள்ளலாம்
இருப்பதை 234 தொகுதிகள் எல்லாருக்கும் ஆசை நிறைய உள்ளது ஆனால் இந்த 234 குள் அடக்கி கொள்ள வேண்டும் அதற்குள் எப்படி அடக்கிக் கொள்கிறோம் என்பது போக போக தான் தெரியும் ஆனால் யாராக இருந்தாலும் எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கும் இருந்தாலும் உண்மையாக என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு கூட்டணி பேச்சு வார்த்தையை முடித்துக் கொள்ள வேண்டும்
ராகுல் காந்தி பொறுத்த வரைக்கும் ஒரு நியாயமான கோரிக்கையாக இருந்தாலும் சரி, அது யாருடைய கோரிக்கையாக இருந்தாலும் சரி, தனி மனித சுதந்திரமாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட கருத்து உரிமையாக இருந்தாலும் சரி அதற்கு ஆதரவு கொடுப்பார்.. அப்படித்தான் விஜயின் ஜனநாயகனுக்கு ஆதரவு கொடுத்தார்..
விஜய் பொறுத்தவரைக்கும் கூட்டம் வருகிறது.. அதில் சந்தேகமே கிடையாது.. அந்த கூட்டங்கள் ஓட்டுக்களாக மாறுமா? அந்த ஓட்டுக்கள் சீட்டுகளாக மாறுமா? என்றால் சொல்லத் தெரியாது அந்த அனைத்து ஆதரவுகளும் வாக்குகளாக மாறி வாக்குகள் சீட்டுகளாக மாறுவது என்பது ஒரு பெரிய ப்ராசஸ் செய்ய வேண்டும் .. குறிப்பாக இந்த விஜய்க்கு ஆதரவு இருப்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது
ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய சூப்பர் ஸ்டாரை பார்க்க வருகிறார்கள்.. கொள்கைப் பிரகடனத்தை கேட்பதற்காக வரவில்லை. அவர் ஒரு பிரபலமுகம் பிரபலமான நடிகர் அதற்காக அவரை பார்ப்பதற்கு கூட்டம் வருகிறது.. ஆனால் மற்ற கட்சிகளை பொறுத்த வரைக்கும் மேடைப்பேச்சுகளை நீண்ட நேர உரையாடல்களை கேட்பதற்கு மக்கள் தயாராக இல்லை.. அதற்கு முக்கிய காரணம் சமூக வலைதளங்கள் தான் என்றார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருவது சம்பந்தமான கேள்விக்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம், பலருக்கு பல்வேறு கருத்துக்கள் இருக்கும் எங்கள் கட்சியில் இருக்கும் அனைவருக்கும் ஒரே சிந்தனை இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.. சிலர் வெவ்வேறு கோணத்தில் சில விஷயங்களை பார்ப்பார்கள்.. அவர்கள் அவருடைய கருத்தை சொல்லி இருக்கிறார்கள்.. அதிகாரப்பூர்வமாக எல்லோரும் இதையே பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது.. நானும் ஒத்துக் கொள்கிறேன்.. " இவ்வாறு கூறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications