தாடியை எடுக்க மறுத்த காஷ்மீர் மருத்துவருக்கு சீட் மறுப்பு? கோவை மருத்துவ கல்லூரி மீது குற்றச்சாட்டு
கோவை: தாடி வைத்த காரணத்திற்காக நீட் எஸ் எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற காஷ்மீரை சேர்ந்த மருத்துவருக்கு சீட் ஒதுக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கோவையில் உள்ள மெடிக்கல் செண்டர் & மருத்துவமனையில் காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் சுபைர் அகமதுவிற்கு மருத்துவ மேல் படிப்புக்காக இடம் கிடைத்த நிலையில், அவர் தாடியை ஷேவ் அல்லது டிரிம் செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் சீட் கிடைக்காது என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கோவையில் உள்ள மெடிக்கல் செண்டர் & மருத்துவ கல்லூரியில் காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் சுபைர் அகமதுவிற்கு மருத்துவ மேல் படிப்புக்காக இடம் கிடைத்துள்ளது. நீட்-எஸ்.எஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அவருக்கு இந்த மருத்துவ கல்லூரியில் நரம்பியல் துறையில் இடம் கிடைத்தது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சுபைர் அகமது தனது மத வழக்கப்படி, தாடி வளர்த்துள்ளார்.

கல்லூரி சீட் கிடைக்காது
ஆனால் இதற்கு மருத்துவமனை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. தாடி எடுக்க வேண்டும் இல்லையென்றால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி சீட் கிடைக்காது என்றும் கூறியதாம். தனது மத வழக்கப்படி தாடி வைத்து இருப்பதாகவும் சுகாதாரத்தை பேணுவதோடு, தாடியை மறைக்கும் விதமாக மாஸ்க் அணிந்து வருகிறேன் என்று சுபைர் அகமது கூறியும் அதை ஏற்க மறுத்துள்ளது.
தாடியை டிரிம் செய்ய வேண்டும் அல்லது சுத்தமாக மழிக்க வேண்டும். இல்லையென்றால் கல்லூரியில் சேர வேண்டாம் என்று கண்டிப்பாக நிர்வாகம் கூறியதால், தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மருத்துவர் சுபைர் அகமது விட்டுக்கொடுத்துள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, "நாங்கள் யாருக்கும் சீட் ஒதுக்க மறுக்கவில்லை. விண்ணப்பதாரர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிவியலில் தேசிய தேர்வு வாரியம் தேர்வில் எடுத்த ரேங்க் அடிப்படையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தது.
கல்லூரி நிர்வாகம் விளக்கம்
சுபைர் முகம்மது விவகாரம் குறித்து கேட்ட போது, "அவர் மார்பு அளவுக்கு தாடி வைத்து இருந்தார். அவர் சேர இருந்த நரம்பியல் துறையில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நோயாளிகள் பலருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும். எனவே, தனிப்பட்ட சுகாதாரம் என்பது மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்தது.
இது தொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், "மருத்துவர் சுபைர் அகமது எம்.எஸ் தேர்வு எழுதியிருந்தார். மருத்துவ கல்லூரியில் 26 ஆம் தேதி அட்மிஷன் எடுத்துக்கொள்ளுமாறு தேர்வு வாரியம் கூறிய நிலையில், அட்மிஷனுக்காக 19 ஆம் தேதி மருத்துவ கல்லூரியை அணுகியுள்ளார். அவர் வைத்த சிறப்பு கோரிக்கையை அடுத்து, தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அட்மிஷனுக்காக அணுகவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்
கோவை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் கூறுகையில், "இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உடைக் கொள்கை கடுமையாக பின்பற்றப்படுகிறது. எனவே, தாடி வைத்துக்கொள்ளவும் அனுமதி இல்லை. எனினும், டிரிம் செய்து தாடியை வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. சீனியர் மருத்துவர்கள் கூட இப்படி இங்கு உள்ளனர்" என்றனர்.
இதுகுறித்து டாக்டர் சுபேர் அகமதுவை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால், ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம், டாக்டர் அகமதுவின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், "அகில இந்திய அளவில் தகுதி அடிப்படையில் தேர்வு எழுதி இடம் பெற்றிருந்தும், வேறு வழியின்றி டாக்டர் சுபேர் அந்த இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தாடி வைத்த காரணத்திற்காக சீட் ஒதுக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு மருத்துவத்துறையில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications