பொள்ளாச்சி தென்னந்தோப்பு ரிசார்ட்டில் அரை நிர்வாணமாக இளம்பெண்களுடன் மாணவர்கள் கூத்தடித்தது அம்பலம்
Recommended Video
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மதுவிருந்தில் ரகளை செய்த மாணவர்கள் அரை நிர்வாண நிலையில் இளம்பெண்களுடன் ஆபாச நடனமும் ஆடியது அம்பலமாகியுள்ளது.
கோவையில் ஆழியாறு, டாப்சிலிப் சுற்றுலா பகுதிகளில் ஆனைமலையை சுற்றி ஏராளமான ரிசார்டுகள் செயல்படுகின்றனர். அதன் படி பொள்ளாச்சி சேத்துமடை அண்ணா நகர் பகுதியில் ஜெய்கணேஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இங்கு ஜெய்கணேஷ் அனுமதியின்றி அக்ரி நெஸ்ட் என்ற ரிசார்ட் நடத்தி வந்ததாக தெரியவந்தது.
இந்த ரிசார்ட்டுக்கு கேரள மற்றும் கோவை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 170 பேர் நேற்று முன் தினம் இரவு வந்து தங்கினர். அப்போது அங்கு மதுவிருந்து நடத்தப்பட்டது. இதில் கஞ்சா, கோகைன் ஆகிய போதை பொருள்களை உட்கொண்ட மாணவர்கள் அதிக சப்தத்துடன் பாட்டு பாடி கூத்தடித்துள்ளனர்.

தகவல்
இதனால் அங்கு சுற்றியிருந்த பொதுமக்களும் விவசாயிகளும் தட்டிக் கேட்டனர். அதற்கு அவர்களை அந்த மாணவர்கள் கண்டபடி பேசியுள்ளனர். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

போதை மாத்திரைகள்
கோவை மாவட்ட எஸ்பி சுஜித்குமார் தலைமையிலான 40 போலீசார், நள்ளிரவில் சேத்துமடைக்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரிசார்ட்டில் இளைஞர்களில் பெரும்பாலானோர் மதுபோதையில் இருந்ததும், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பயன்படுத்தியதும் தெரியவந்தது.

போலீஸார் எச்சரிக்கை
அங்கிருந்தவர்களை சுற்றி வளைத்து விசாரித்தனர். இதன்பேரில், கும்மாளம் போட்டு அத்துமீறலில் ஈடுபட்ட 162 பேரை வேனில் ஏற்றிசென்று, அங்குள்ள ஒரு மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் அங்கு அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்களுடன் நடனம் ஆடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

பலாத்காரம்
பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரச் சம்பவம் உக்கிரமாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதே பொள்ளாச்சியில் மாணவர்கள் போதையில் ரகளை செய்து கொத்தாக கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications