மறுமணம் செய்வதாக ஆசை வார்த்தை.. 7 லட்சம் மோசடி செய்த கேரள இளைஞர் கைது
கோவை: மறுமணம் செய்வதாக ஆசை வார்த்தை காட்டி அந்த பெண்ணிடம் இருந்து ரூ 7 லட்சத்தை மோசடி செய்த கேரள இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியே வசித்து வந்தார். இந்த நிலையில் ரேவதியின் வாழ்வில் ஒருவர் வந்ததால் அவரது சொல்லொண்ணா துயரத்தை அடைந்துள்ளார்.
ரேவதியின் கல்லூரி நண்பரான கேரளத்தைச் சேர்ந்த ஜிதின்ஷா, 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்ஸ்டாகிராம் மூலம் நட்பை புதுப்பித்துக் கொண்டார். ரேவதியுடன் நெருங்கி பழக ஆரம்பித்துவிட்டார். இந்த நிலையில் ரேவதியின் தனிமை குறித்து ஜிதின்ஷா தெரிந்து கொண்டார்.

முதலில் மறுப்பு
மேலும் அவருக்கு யாருடைய ஆதரவும் இல்லை என்பதையும் அவர் நன்றாகவே புரிந்து கொண்டார். இதனால் ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்கிறாயா என ஜிதின்ஷா, ரேவதியிடம் கேட்டுள்ளார். அதற்கு முதலில் மறுத்த ரேவதி, பின்னர் பச்சைக் கொடி காட்டிவிட்டார்.

10 லட்சம் தேவை
திருமண முடிவு இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தனக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்துள்ளதால் அதற்கு ரூ 10 லட்சம் தேவைப்படுகிறது என ரேவதியிடம் ஜிதின்ஷா கூறியுள்ளார்.

ரூ 7 லட்சம்
இந்த பணத்தை செலுத்திவிட்டு நாம் இருவரும் வெளிநாட்டில் சந்தோஷமாக வாழலாம் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய ரேவதி, தன்னிடம் இருந்த 7 லட்சம் ரூபாயை ஜிதின்ஷாவிடம் கொடுத்துள்ளார்.

அதிர்ச்சி
இதையடுத்து ரேவதியை முகநூலில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் , தான் ஜிதின்ஷாவின் மனைவி என்றும் திருமணம் ஆகவில்லை என கூறி அவர் பல பெண்களை ஏமாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ரேவதி அதிர்ச்சி அடைந்தார்.

புகார்
பின்னர் இதுகுறித்து ஜிதின்ஷாவிடம் ரேவதி கேட்டுள்ளார். அப்போது ஏதோ மழுப்பிய ஜிதின்ஷா, நாளடைவில் ரேவதியுடன் பழகுவதையே நிறுத்திக் கொண்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. துபாய் தப்பி செல்ல முயன்ற இவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications