அய்யோ.. டாய்லெட்டுக்குள் ராஜநாகம்.. அலறி அடித்து ஓடிய பெண்கள்!
Recommended Video
கோயம்பத்தூர்: கோவையில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் இருந்ததைப் பார்த்து பெண்கள் அலறி அடித்து ஓடினர்.
அடுக்குமாடிக் குடியிருப்பில் இந்த ராஜநாகம் புகுந்துள்ளது. இதுதான் அந்தப் பகுதி மக்களை அதிர வைத்துள்ளது. எப்படி அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் அதுவும் கழிவறைக்குள் ராஜநாகம் புகுந்தது என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் மகளிர் ஹாஸ்டல் ஒன்று செயல்படுகிறது. அங்கு வேலை பார்க்கும் பெண்கள் உள்ளிட்டோர் தங்கியுள்ளனர்.
இன்று காலை ஒரு பெண் கழிவறைக்குப் போயுள்ளார். அப்போது வெஸ்டர்ன் டாய்லெட்டுக்கு அருகில் ஏதோ நெளிவது போல இருக்கவே என்ன என்று பார்த்துள்ளார். அப்போதுதான் அது ஒரு பாம்பு என்று தெரிய வந்தது. இதையடுத்து அலறி அடித்து வெளியே ஓடி வந்த அவர் மற்ற பெண்களை அழைத்தார். அவர்களும் வந்து பார்த்து அலறி அடித்தனர்.
பின்னர் சாதுரியமாக அந்த டாய்லெட் கதவைப் பூட்டிய அவர்கள் தீயணைப்புப் படையினருக்கும், அந்தப் பகுதியில் உள்ள பாம்பு பிடிப்பவர் ஒருவருக்கும் தகவல் கொடுத்தனர். பாம்பு பிடிப்பவர் விரைந்து வந்து சாதுரியமாக அந்த பாம்பைப் பிடித்து வெளியே கொண்டு வந்தார். இது கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் என்றும், கடித்தால் உயிர் போயிருக்கும் என்று அவர் கூறியதைக் கேட்ட பெண்களுக்கு மயக்கம் வராத குறைதான்.

நல்லவேளையாக பாம்பு யாரையும் கடிக்காமல் போனதாலும், பெண்கள் சமயோஜிதமாக செயல்பட்டதாலும் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த ராஜநாகத்தின் முட்டைகள் ஏதாவது அந்தப் பகுதியில் இருக்கிறதா என்று தற்போது தீவிர வேட்டை நடந்து வருகிறது. இவ்வளவு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் அதுவும் கழிப்பறைக்குள் எப்படி ராஜநாகம் புகுந்தது என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரங்களின் கிளைகள் வழியாக பாம்புகள் ஊடுறுவ வாய்ப்புள்ளதாக பாம்பு பிடிப்போர் சொல்கின்றனர். அடுக்கு மாடிகளில் குடியிருப்போரே.. ரொம்ப சூதானமா இருங்கப்பா.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications