Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொச்சி டூ கோவை மெட்ரோ ரயில்.. பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி அருமையான ஐடியா.. சாத்தியமா?

Subscribe to Oneindia Tamil

கோவை: கேரள மாநிலம் கொச்சி நகரில் இருந்து தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான கோவை நகரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்க வேண்டும் என்று திருச்சூர் தொகுதி பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி அருமையான ஐடியா கொடுத்துள்ளார். இந்த ஐடியா உண்மையில் சாத்தியமா என்பதை இப்போது பார்ப்போம் .

கோவை மாநகரம் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். கேரளாவை பொறுத்தவரை மாநிலத்தின் வர்த்தக தலைநகரமாகவும், கேரளாவின் மிகப்பெரிய நகரமாகவும் கொச்சி தான் இருக்கிறது. கொச்சி எர்ணாகுளம் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். அரபிக்கடலில் உள்ள மிகப்பெரிய துறைமுக நகரமான கொச்சினில் ஏற்கனவே மெட்ரோ ரயில் ஓடுகிறது.

Kochi to Coimbatore Metro Rail BJP candidate Suresh Gopi s great idea is possible

அரபிலின் இராணி என்று அழைக்கப்படும் கொச்சியில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வசிக்கிறார்கள்... இந்தியக் கடற்படையின் தென்மண்டலக் கட்டளை மையம் மற்றும் தலைமையிடம் கொச்சியில் தான் இருக்கிறது. கேரளாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் கொச்சியில் தான் இருக்கிறது.

இந்திய பங்குச் சந்தை நிறுவனத்தின் கிளை கொச்சியில் தான் அமைந்திருக்கிறது. கொச்சியில் கொச்சி பங்குச் சந்தை, பன்னாட்டு மிளகு வணிக மையம், தென்னை வளர்ச்சிக் கழகம், கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மையம், திருவாங்கூர் உரம் மற்றும் வேதியியல் தொழிற்சாலை, இந்துஸ்தான் இயந்திரக் உபகரணங்கள், அப்போல்லா டயர்ஸ், பெட்ரோ-கெமிக்கல் தொழிற்சாலைகள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், கொச்சி கப்பல் கட்டும் தளம் உள்பட பல தொழிற்சாலைகள் உள்ளன.

கேரளாவின் ஒரே மிகப்பெரிய மெட்ரோ நகரம் என்றால் அது கொச்சி தான். கொச்சியில் தான் கேரள மாநிலத்தின் உயர்நீதிமன்றமும் இருக்கிறது. நிர்வாகத்தை தவிர (திருவனந்தபுரம்) அனைத்திற்கும் தலைநகரம் என்றால் அது கொச்சி நகரம் தான்..

கொச்சிக்கு எளிதாக வர வேண்டும் என்றால், தமிழ்நாட்டின் கோவை நகருக்கு வந்து தான் கேரளாவைச் சேர்ந்தவர்கள் வரமுடியும். ரயில் வழி பாதையும் கோவை வழியாகவே உள்ளது. இதனால் கோவை மாநகரம் கேராளவின் நுழைவு வாயிலாக இருக்கிறது. கோவையை பற்றி சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம்.. மக்கள் தொகையில் மட்டுமல்ல.. பரப்பளவிலும் கோவை தான் பெரியது. கோவை மாநகரம் சென்னைக்கு அடுத்தபடியாக அதிவேகமாக வளரும் நகரம்.. இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்களில் அதிவேகமாக வளரும் நகரம் என்றால் அது கோவை தான்.

கோவை முழுவதும் சிறுகுறு தொழில்கள் அதிக அளவில் உள்ளது. தென்னிந்தியாவின் மான்சிஸ்டர்.. ஜவுளி தொழிற்சாலைகள், மோட்டார், பம்புகள், கனரக வாகனங்களின் உதிரி பாகங்கள், சிஎன்சி மிஷின் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், கிரைண்டர், மிக்சி தயாரிப்பு தொழிற்சாலைகள் என பல்வேறு வகையான தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளது. கோவையை சுற்றி 40 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஏராளமான தொழிற்சாலைகள் பரந்து விரிந்து காணப்படுகிறது.

இதுதவிர தமிழ்நாட்டின் கல்லூரிகளின் தலைநகரமாகவும் கோவை இருக்கிறது. கோவையில் தான் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பெரிய கல்லூரிகள் இருக்கின்றன. கோவையில் உள்ள கல்லூரிகளில் படிக்க கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்து ஏராளமானோர் ஆண்டுதோறும் வருகிறார்கள். கோவையில் மெட்ரோ ரயில்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சி நகரில் இருந்து தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான கோவை நகரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்க வேண்டும் என்று திருச்சூர் தொகுதி பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி அருமையான ஐடியா கொடுத்துள்ளார். மேலும் டெல்லி மெட்ரோ ரயில் உத்தரப்பிரதேசத்திற்கும், அரியானாவிற்கும் போகிறது.. அப்படி மூன்று மாநிலங்களில் அமைக்கும் போது, ஏன் தமிழ்நாடு கேரளா இடையே மெட்ரோ ரயில் அமைக்க முடியாது என்று சுரேஷ் கோபி கேள்வி எழுப்பினார்.

கொச்சி மெட்ரோ பாலக்காட்டை தாண்டி கோவை வரை போக வேண்டும் என்று நடிகர் சுரேஷ் கோபி கோரிக்கை வைத்தார். கோவை டூ கொச்சி என்பது 189 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இந்த பகுதியில் மெட்ரோ ரயில் பாதை அமைத்தால், கேரளாவிற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். கோவை பகுதியிலும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி ஏற்படும். தற்போது கோவையில் இருந்து கொச்சி செல்ல 4 மணி நேரம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+